பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 102

     சிடுக்கும் நிரம்பியதாக இருக்கவேண்டும். தெளிவு தொனிக்க வேண்டும். ஆனால்
சிக்கல் விடுவிக்கக் கூடாததாகவும் இருக்கவேண்டும். கவிதை நயம் எது என்று எடுத்துச்
சொல்லக் கூடாததாக இருக்க வேண்டும். புரியவில்லை போல இருக்க வேண்டும்.
அதேசமயம் பூராவும் புரியாமலும் இருந்துவிடக் கூடாது’ என்பதை அப்படியே பின்பற்ற
ஆசைப்பட்டவர் துரைஸ்வாமி என்று எனக்குப்படுகிறது.

     ‘வர்ணபேதம்’ என்ற கவிதையை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
 
  கற்புக்கு முல்லை;
கட வுளுக்குத் தாமரை;
காமத்துக்கு அல்லி;
என்று சொன்னால்;
முல்லைக்கு வெள்ளை;
தாமரைக்குச் சிவப்பு;
அல்லிக்கு இருட்டு;
என்று சொன்னால்
முல்லை மலர
அல்லி சோரும்
தாமரை மலர
முல்லை சோரும்;
அல்லி மலர
என்ன சொல்ல?
என்று சொன்னால்;
எங்கு சென்றால்,
என்ன செய்தால்

அல்லி முல்லையாக,
முல்லை மரையாக,
மரையும் அல்லி மலராக
மாற்றத்தில் மாற்றமுற.
ஏகம் அநேகமாக
அநேகம் ஏகமாக,
வருவது உண்டோ?
செய்வது அரிதோ?
என்று சொன்னால்?

     இதில் ஏதோ மர்மம், பொருள், தத்துவம் இருப்பதாக வாசகன் குழம்பிக் கொண்டு
மூளைக்கு வேலை கொடுக்க அவதிப் படட்டுமே என்பதுதான் கவிஞரின் அந்தரங்க
நோக்கமாக இருக்கமுடியும்!

     வசனத்தையே கவிதை என்று தருவதும் துரைஸ்வாமியின் சோதனை முயற்சிகளில்
ஒன்று. ‘அறியாதவர் ஒருவருமில்லை’ என்பது கவிதையாம்.