| அள்ளி விழுங்குவரை நீர்பாய்ச்சி என்ன பயன் வேர்முளைக்கக் காணோமே! |
முதல் வருடத்தில் கவிதை எழுதத் தொடங்கிய கி.கஸ்தூரி ரங்கன் ‘கற்பனைப் பெண்’ என்ற இனிய கவிதை ஒன்றே ஒன்றை மட்டும் எழுதியதுடன் நிறுத்திக்கொண்டார். அது ரசிக்கப்பட வேண்டிய படைப்பு. |
| மஞ்சம் ஒழிந்திருக்கப் பஞ்சணைகள் பூத்திருக்க கன்னம் செவ செவக்கக் கற்பனையே பெண்ணே நீ நெஞ்சில் துயிலுவதேன்-என் நெஞ்சில் துயிலுவதேன்? உதயம் ஒளித்திசையில் உருவாவ தறியாமல் இதயம் துடித்திசைக்கும் இன்பத்தா லாட்டுக்களில் கதையாம் கவிதைகளாம் கனவுகளாகக் கண்டு கொண்டு கண்ணில் உறங்குவதேன்-என் கண்ணில் உறங்குவதேன்? நெஞ்சோ முட்படுக்கை! என் கண்ணோ கனலிருக்கை! பஞ்சோ பொறியருகில்? மலரோ முள்ளின் மேல்? நஞ்சோ அமுதமாகும்? நானோ(உ)ன்னருள் பெற்றேன்! |
வேறு சிலரும் அபூர்வமாக ஒன்றிரண்டு கவிதைகள் எழுதினார்கள். எனது கவிதைகள் இரண்டு (விஷமும் மாற்றும்; குருட்டு ஈ) 16-வது இதழில் இடம் பெற்றன. பிச்சமூர்த்தி இயற்கை தரிசனங்களையும் வாழ்க்கை உண்மைகளையும் இணைத்து அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார். சுமைதாங்கி, லீலை, போலி, திறவுகோல், ஸ்விச், மணல் ஆகியவை 1960-61 வருடங்களில் ‘எழுத்து’ ஏடுகளில் பிரசுரமாயின. ஜெகாந்தன் எழுதிய கவிதை ஒன்று (நீயார் - எழுத்து 32) குறிப்பிடத் தகுந்தது. |
| நீ யாரென்றேன் அழுக்கு என்றாய் பேரேதென்றேன் பொய் என்றாய் |