‘அலங்காரம்’ என்றொரு சொல்லடுக்கு. |
| மயிற்கண் முலைப்பால், நெடுவேனில் கார்காலம் சென்று தேய்ந்திறுதல், கொல்லிப்பாவை; மன்னுமிவ்வுலகு. |
இப்படிப்பட்ட சோதனைகளினால் புதுக் கவிதைக்கு வளம் சேர்க்க முயன்ற பெருமை துரைஸ்வாமிக்கு உண்டு. 1960-61 ஆண்டுகளில் ‘எழுத்து’ மூலம் அறிமுகமாகி வளர்ச்சி பெற்ற கவிஞர்களில் முக்கியமானவர் சி.மணி. இவரது முதல் கவிதை ‘குகை’ 15-வது ஏட்டில் பிரசுரமாகியுள்ளது. ஏதோ இருள் மனக் குகை ஓவியம். அதிலும் ஒரு வசீகரம் இருக்கிறது. அடுத்து, 18-வது இதழில் வந்த ‘அரக்கம்’ உலக இயல்பைக் கூறுகிறது. |
| வாடிய பூக்களில் வீழ்ந்து ஒழிந்தாலும் விழித்த மலர்கள் சிரித்து மினுக்கும்; ஈன்ற வாழை இளைத்துச் சாய்ந்தாலும் உயிர்த்த கன்று முகிழ்த்து மிளிரும் வீசிய விண்மீன் சரிந்து அணைந்தாலும் மிகுந்த மீன்கள் விரித்துச் சிமிட்டும்; ஊட்டிய அன்னை உழைத்து ஓய்ந்தாலும் எஞ்சிய குமரன் குமரியைப் பிடிப்பான். |
சி. மணியின் ‘மறுப்பு’ (எ. 19) மனக்குகையின் இருள் காட்சியாகத் தான் ஒளியிடுகிறது. ஸர்ரியலிஸ ஓவியம் மாதிரி இருக்கிறது இதில் வர்ணிக்கப்படுகிற காட்சி. |
| ஓடிந்த அநாதை நிலா தொழுநோய்க் கூனனாக பிரேதக்களை ஓளிர மருந்து தேடித்தேடி அலைய, வழிந்த சீழ் உருண்டோடி மஞ்சற் கட்டியாகி நெஞ்சு வலியாய்த் துடிக்க, சீ முனையில் வெடித்த பல முகில்கள் மனக் குகையின் இருள் வடிவாய் பேய்க்கணமாய் ஆந்தையாய்ப் பரவி வானுக்குக் கிழிந்த திரை போட |
என்று மேலே மேலே போகிறது கவிதை. அதெல்லாம் ஏன் ஏற்பட்டது? |
| இளமைக் குவியலாய் இன்ப நுகர்ச்சியாய் ஆடிப் பாடிய நான் |