| ஓரே கணத்தில் விரக்தி வடிவாகி நரைக்கக் |
காரணம். கன்னி ஒருத்தி அவன் ஆசையோடு நெருங்கி கேட்டபோது, அவள் |
| ‘தனி ஊசல் போல இடவலமாய் தலையசைத்’ததுதான்! |
காதல் தோல்வி கண்ட விரக்தி உள்ளத்தின் வாழ்க்கைச் சூன்ய நோக்கை இக்கவிதை சித்திரிக்கிறது. |
| ‘இருளின் நிழல்’ என்பதும் சாக்காட்டு உலகில் என்னை விட்டு கூடு விட்ட பறவையென |
ஓடி மறைந்த ‘பெண்ணை எண்ணிப் பித்துற்ற மனசின் விரக்திப் புலம்பல்தான். ‘கதவை மூடு’ வேறு தொனியில் அமைந்துள்ளது. ஆயினும், இதிலும் விரக்தியே மேலோங்கி நிற்கிறது. |
| கதவை மூடு வீங்கி விரிந்த மாநிலம் துவண்டு விழுந்தால் ஆறடி வாழ விட்ட பூமகள் சாய்ந்ததும் செரித்திடுவாள்; அபூர்வமாய் பெற்ற மகனாய் நீ வளர்த்த நாயும் கடிக்கும்; நோய் பிடிக்க கடனேற நீயே உனக்கு எதிராவாய்; கதவை மூடு, கதவை மூடு நகையாய் வெறுத்த உடை நலிந்தும் கூடையிலே; பூவையர் குழல் பூச்சரம் வாடியதும் குப்பையிலே விளங்க வந்த மனைவிக்கு மாத முடிவில் மூலையிலே; வானுக்கு உயிரூட்டி சிரித்தேகும் எரிகல் உதிர்ந்ததும் ஒன்றுமில்லை காற்றேன்? மூச்சேன்? கதவை மூடு, கதவை மூடு, |
கவிஞர்கள் நிலவை எவ்வாறெல்லாமோ வர்ணித்து விட்டார்கள். |