பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 106

இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும், நிலவை ரசிப்பதிலும் வியந்து பாராட்டுவதிலும் மனித மனசுக்கு அலுப்பு ஏற்படும் என்று தோன்றவில்லை.

     நிலவை புதியதோர் கோணத்தில் பார்த்து (புதுக்)கவிதை செய்தார் எஸ். வைதீஸ்வரன்
அருமையான படைப்பு. ‘எழுத்து’வில் வந்த அவருடைய முதல் கவிதை இதுதான். 34-35
என்று இரட்டை இலக்கமிட்ட ஏட்டில் பிரசுரமாயிற்று.
 

கிணற்றில் விழுந்த நிலவு

 
கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கி விடு
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கி விடு
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோய விடு
நடுங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு
கலைமேவும் அவள் குழலைக் காற்றிலே கோதி விடு
அலைக்கும் அவள் மார்பை அல்லிக்கொடி அணைக்க விடு
மருண்ட முகம் தெளியத் திருமஞ்சள் பூசி விடு
ஈதனைத்தும் செய்து விட்டு இதமான கவிதைகளால்
ஒத்தடங்கள் கொடுத்து விடு
உடலெங்கும் தேன் பூசிப் பத்திரமாய்ப் பெண்ணிவளை
வான் முனையில் கொண்டு விடு
இருட்டு முடியுமுன்னே, இரவு முடியுமுன்னே
திருஷ்டி கழித்தவளைத் திருப்பி யனுப்பி விடு
 

     இவ்வாறு இன்னும் பல வரிகளைக் கொண்டது இக்கவிதை. இதற்கு ‘ஒட்டு’ம்
‘வெட்டு’ம் ஆக இரண்டும் கவிதைகள் எழுதினார் தி.சோ. வேணுகோபாலன்.

     கற்பனை விரிவும் கருத்தாழமும் உணர்வோட்டமும் கொண்ட கவிதைகள் அவை.
நிலவைக் கற்பரசியாகக் கொண்டும் நாணமிலாப் பரத்தையாகக் கொண்டும் ஒட்டும்
வெட்டும் படைக்கப்பட்டுள்ளன இவை ‘எழுத்து’ 36-ம் ஏட்டில் இடம் பெற்றன.

     ‘எழுத்து’ 36-வது இதழ் அருமையான கவிதைகள் பலவற்றுடன் விளங்கியது.
வேணுகோபாலனின் ‘ஒட்டும் வெட்டும்’ டி.கே. துரைஸ்வாமியின் பேதாபேதம், அலங்காரம்
சிலேடை ஆகிய ‘மூன்று கவிதைகள்’ இவற்றுடன் டி.சி. ராமலிங்கம் (தரும சிவராமு)
கவிதைகள் ஐந்தும் இதில் வெளிவந்தன.

     படிமச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகப் பலரால் பல இடங்களில் கையாளப்
பெற்றுள்ள ‘விடிவு’ இவ்வைந்து கவிதைகளில் ஒன்று.
 
  பூமித் தோலில்
அழகுத் தேமல்
பரிதி புணர்ந்து
படரும் விந்து
கதிர்கள் கமழ்ந்து
விரியும் பூ.
இருளின் சிறகைத்