எஃப்.எ.ஸ் ஃபிளிண்ட் என்பவர் எழுதினார். ‘Rhyme and metre are artificial and external additions to poetry and that the various changes that can be rung upon them were worked out. They grew more and more insipid until they have become contemptible and encumbering.’ இது இன்றைய தமிழ்க் கவிதை சம்பந்தமாக எவ்வளவு வார்த்தைக்கு வார்த்தை பொருந்துகிறது! பல நூற்றாண்டுகளுக்கு முன்பு படைப்பான விரல்விட்டு எண்ணக் கூடிய சில சிறந்த நூல்களுக்குப் பிறகு இந்த நூற்றாண்டு ஆரம்பகால பாரதிக்குவரும் வரையில், சொல் ஆடம்பரமும் நச்சுப்படுத்தப்பட்ட உள்ளடக்கமும் மலிந்த படைப்புகள் எத்தனை? பாரதிக்குப் பிறகு இன்றுவரை கூட அதே ரீதியில், கற்பனையும் கருத்தும் இல்லாமல் பத்திரிகை செய்யுள்களாக தீபாவளிக்கும் பொங்கலுக்கும், பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ஐந்தறைப் பெட்டியிலிருந்து ‘ஃபார்முலா’ ரீதியாகத் தயாராகும் ஓசைச் சொல் செய்யுள்களும் மெட்டுப் பாட்டுகளும் எத்தனை? இதை வைத்துத் தமிழில் 2000 கவிகள் இருப்பதாக ஒரு பெருமை வேறு! புதுக்கவிகள் இயக்கம் இதையெல்லாம் உடைத்து மீட்சி பெற இயங்குகிற இயக்கம். இதில் தன் பங்கை இந்த நான்கு ஆண்டுகளாக செலுத்தி வருவதுதான் எழுத்துவின் சாதனை. வாசக அன்பர் குறிப்பிட்டிருப்பதுபோல் எதிர் பார்த்திராதது தான். ஆனால் அது நடந்து விட்டது- எதிர் பார்த்திருந்தாலும் அதுக்கு மேலாக, எழுத்து பிரசுரம், வெளியீடுகளாக வெளி வந்திருக்கும். ‘காட்டு வாத்து’ம் (ந.பிச்சமூர்த்தி) புதுக்கவிதைகள் தொகுப்பும் இதுக்கு சான்று? 1962-ல் ‘எழுத்து’ ஏடுகளில் வந்த கவிதைகள் பலவும் கருத்து ஆழம், கற்பனை வளம், வாழ்க்கைத் தத்துவம், மற்றும் நயங்கள் அநேகம் கொண்ட வளமான படைப்புகளாக விளங்கின. டி.கே. துரைஸ்வாமி, சி.மணி, எஸ். வைதீஸ்வரன், தருமு சிவராமு, வல்லிக்கண்ணன் அதிகமான கவிதைகள் எழுதியுள்ளனர். தி.சோ. வேணுகோபாலன், கி. கஸ்தூரி ரங்கன், மயன் ஒவ்வொரு கவிதை படைத்துள்ளனர். புதிதாகக் கவிதை எழுத முற்பட்டிருந்த பலரது கவிதைகளும் இவ்வருடம் எழுத்து இதழ்களில் இடம் பெற்றன. சி.சு. செல்லப்பாவும், சு. சங்கரசுப்ரமணியனும் கவிதை முயற்சிகளில் உற்சாகத்தோடு ஈடுபட்டனர். ஆங்கிலத்திலிருந்து பல கவிஞர்களின் படைப்புகள் தமிழாக்கப்பட்டு பிரசுரமாயின. ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் மூன்று வந்துள்ளன. இவ்வருடத்தில், புதுக்கவிதையில் நெடுங்கவிதை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிச்சமூர்த்தியின் ‘காட்டுவாத்து’ம் சி.மணியின் ‘நரகம்’ கவிதையும் சிறப்பான படைப்புகள். ‘நரகம்’ விசேஷமானது இதை வெளியிட்டபோது, 43-வது ஏட்டில் புதுக்கவிதையில் ‘ஒரு மைல் கல்’ என்று தலையங்கம் எழுதி ‘எழுத்து’ பெருமைப்பட்டது. “எழுத்துவில் இதுவரை வெளிவந்திருக்கும் நூற்றுக்கும் அதிகமான கவிதைகள் புதுக்கவிதையின் சத்தான, தாக்கான குணங்களை நிரூபித்திருக்கின்றன. சி. மணியின் ‘நரகம்’ புதுக்கவிதை முயற்சியில் ஒரு | | |
|
|