| அழி வெய்தாதபடி காக்கலாம். அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும், புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம் மாறும், வடிவத்தைக் காத்தால், சக்தியை காக்கலாம்; அதாவது, சக்தியை அவ்வடிவத்திலே காக்கலாம்; வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை எங்கும், எதனிலும், எப்போதும் எல்லா விதத் தொழில்களும் காட்டுவது சக்தி. வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக. சக்தியைப் போற்றுதல் நன்று வடிவத்தைக் காக்குமாறு. ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்து விடுவர்.” | (‘சக்தி’) |
|
பாரதி தன்னுள் லீலைகள் புரிந்த சக்தியைப் போற்றினார். சக்தியை விதவிதமான வடிவங்களில் துதித்தார். பாம்புப் பிடாரன் பற்றி பாரதி கூறுவது அவருக்கும் பொருந்தும். |
| “இஃது சக்தியின் லீலை, அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின் தொளையிலே கேட்கிறது. பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே இசையுண்டாக்குதல்-சக்தி” | |
|
இப்படி ‘பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசையுண்டாக்கும்’ முயற்சிதான் பாரதியின் வசனகவிதைப் படைப்பு ஆகும். |
|
| “கருவி பல, பாணன் ஒருவன். தோற்றம் பல, சக்தி ஒன்று.” | |
|
பாரதி என்னும் பாணன், தன்னுள் ஜீவனுடன் பிரவாகித்துக் கொண்டிருந்த சக்திக்கு புறத்திலே பலப்பல தோற்றங்கள் கொடுக்க விரும்பியபோது அவருக்குப் பயன்பட்ட கருவிகள் பல. முக்கியமானது கவிதை. வசனமும் வசன கவிதையும் பிற. பாம்புப் பிடாரன் குழல் ஊதும் ஆற்றலை பாரதியின் வசன கவிதைச் சொல்லமைப்புக்கு ஒப்பிடலாம். பாரதி சொல்கிறார்: |
| “இதோ பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது, இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்? ... பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக | |