பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 112

புதுக்கவிதைக்கு ஏற்ற வாழ்நிலை ஏற்பட்டு விட்டதை நாம் மறுக்கக்கூடாது.
அச்சுயந்திரமும், லைப்ரரிகளும், மௌன வாசிப்பும் தோன்றிய பிறகு, -அவை தோன்றாத
காலத்தில் அமல் செலுத்திய கேள்வி மரபும் ஸ்தூலக்காதின் ஆட்சியும் கண்ணெதிரே
மறைந்து வருவதைக் கண்ட பிறகு-கவிதையை வேறு விதமாக அமைக்க ஏன்
முயலக்கூடாது?

     ஸ்தூலமான சொல்லுக்கும் நயத்திற்கும் அப்பாற்பட்ட பொருளும் அமைதியும் உண்டு
என்பது என் நம்பிக்கை. அந்த அடிப்படைகளைத் தொட்டு நான் கவிதையை அமைக்க
முயன்றிருப்பதால் பருந்தும் நிழலும் போலுள்ள இசையை இவற்றில் காணலாம். ஸ்தூலத்தை
விட சூக்குமத்திற்கு அதிக சக்தி உண்டென்ற அணுயுகம் நமக்குக் காட்டி விடவில்லையா?”