| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 116 |
தில்லை. ‘புதுக்குரல்கள்’ தொகுப்பில் மார்க்சீய தத்துவ அடிப்படையில் பிறந்த கவிதை எதுவும் இல்லை. ‘எழுத்து’ ஏடுகளில் கவிதை எழுதியவர்களும், ‘புதுக்குரல்கள் கவிஞர்களும் ஃபிராய்டிச தத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சில விமர்சகர்கள் குறிப்பிட முன் வந்தார்கள். இது தவறான கணிப்பு ஆகும். வாழ்க்கையை கவனித்து, வாழ்வும் காலமும் அன்றாட நிகழ்ச்சிகளும் உள்ளத்திலும் உணர்விலும் உண்டாக்கிய அதிர்வுகளை எழுத்தாக்க முயல்கிறவர்கள் அனைவரும் ஃபிராய்டீசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று லேபில் ஒட்டுவது தவறான செயல் தான். அதேபோல் சமூகத்தில் காணப்படுகிற வறுமை, பணத்திமிர், இதர கொடுமைகள் சீர்கேடுகள் முதலியன ஏற்படுத்துகிற உள்ளத்துடிப்புகளை எழுத்தாக்குகிற எல்லோரையும் மார்க்சீயத் தத்துவப் பாதிப்பு பெற்றவர்கள்-மார்ச்சியப் பார்வையோடு பிரச்னைகளை அணுகுகிறவர்கள்- என்று முத்திரை குத்தி விடுவதும் தவறான கணிப்பாகவே முடியும். ஃபிராய்டிசம், மார்க்சிசம் போன்ற தத்துவங்களைப் பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட, வாழ்க்கையாலும், அனுபவங்களாலும் பாதிக்கப்பட்டு தங்கள் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் எழுத்துக்களாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதை எடுத்தாலும் அதற்கு அயல்நாட்டுத் தத்துவப் பெயரைச் சூட்டி விட்டால்தான் விமர்சனம் பூர்த்தி பெற்றதாகும் என்று நினைப்போடு விமர்சிக்க முற்படுகிறவர்கள் தங்கள் அறிவுப் பிரகாசத்தையும் மேதைத் தனத்தையும் வெளிப்படுத்தவே ஆசைப்படுகிறார்கள். ‘புதுக்குரல்கள்’ தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஐந்து (ந.பி., கு.ப.ரா கவிதைகள்) ‘எழுத்து’ காலத்துக்கு முற்பட்டவை மற்றவை 1959-62க்கு உட்பட்ட நான்கு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை. மா.இளைய பெருமாள் 1. கி.கஸ்தூரி ரங்கன் 2. இ.எஸ். கந்தசாமி 2. சு.சங்கர சுப்ரமண்யன் 2. எஸ். சரவணபவானந்தன் 1. பெ.கோ. சுந்தரராஜன் 2. பேரை சுப்ரமண்யன் 1. சிசு. செல்லப்பா 3. தரும சிவராமு 8. டி.கே. துரைஸ்வாமி 4. டி.ஜி. நாராயணசாமி 1. சுப. கோ. நாராயணசாமி 1. சுந்தரராமசாமி 5. ந. பிச்சமூர்த்தி 2. யோ. பெனடிக்ட் 1. சி.மணி 3. க.நா. சுப்ரமண்யம் 2. ஞா. மாணிக்கவாசகன் 1. முருகையன் 1. கே.எஸ். ராமமூர்த்தி 1. கு.ப. ராஜகோபாலன் 3. வல்லிக்கண்ணன் 4. தி.சோ. வேணுகோபாலன் 6. எஸ். வைத்தீஸ்வரன் 5. ஆக 24 கவிகளின் 63 கவிதைகள். ‘கவிதை சொற்களில் இல்லை. ஒலிநயத்தில் இல்லை. கருத்திலே மடை திறக்கும் உணர்வு நெகிழ்ச்சியிலே சுட்டிக்காட்டும் பேருண்மையிலே பொதிந்து கிடக்கிறது’ என்ற ந.பி.யின் விளக்கத்தை நிரூபிக்கும் அருமையான கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. இவ்வாறான கவிதைகளிலும் ஒரு ஒலிநயம் இருப்பதை ரசிகர்கள் உணரமுடியும். தமிழுக்குப் புதுமையானது இத்தொகுப்பு” இது போன்ற தொகுப்புகள் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தயாரிக்கப் | | |
|
|