பக்கம் எண் :

117  வல்லிக்கண்ணன்

படவேண்டும். அப்போதுதான் கவிதையின் வளமும், வளர்ச்சியும் புலனாக வாய்ப்பு
ஏற்படும்.

     ‘புதுக்குரல்கள்’ முதல் பதிப்பு வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட
பிறகு, அதன் இரண்டாம் பாதிப்பு பிரசுரமாக வாய்ப்பு கிட்டியது. மதுரைப் பல்கலைக்கழகம்
எம்.ஏ. வகுப்புக்கு ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை பாடப் புத்தமாகத் தேர்வு செய்தது. இது
மகிழ்ச்சிக்கு உரிய விஷயம். ஆகவே, செல்லப்பா அதன் இரண்டாம் பதிப்பை 1973
ஜூலையில் கொண்டுவந்தார்.

     இது ‘திருந்திய பதிப்பு’முதல் பதிப்பில் இடம் பெற்றிருந்த சில கவிதைகள்
நீக்கப்பட்டுள்ளன. சில கவிஞர்கள் அகற்றப்பட்டு, புதிதாக மூன்று பேர்கள்
சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். சிலரது கவிதைகளில் முதல் பதிப்பில் அச்சாகியிருந்தவற்றில்
சில படைப்புகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போதும் நண்பர் செல்லப்பா
‘தன்மூப்பாக’ செயல் புரியவில்லை; விமர்சகர் சி. கனகசபாபதியின் ஆலோசனையோடும்
உதவியோடும் இத் திருத்தப்பட்ட பதிப்பை உருவாக்கினார் என்று அறிய முடிகிறது.