பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 120

இந்த நூற்றாண்டு வாழ்வு சிக்கித் தவிக்கிறது. என்ன காரணம் இதற்குச் சொல்லித்
தொலைப்பது? பொருளைத் தேடும் முயற்சியிலும் உறவிலும் அருளைத்தேடும்
ஆர்வத்திலும் ஆன்ம வேட்டையிலும் கெக்கலிப்புகளும் ஓலங்களும் சீறலும் சறுக்கலும்
வெள்ளமிட்டு அடித்துவரும் நிலைதான் காரணம். நோயிலே படுத்துவிட்டது கண்முன்னே
நூற்றாண்டு மனிதனின் மனம். இது நோன்பிலே உயிர்ப்பு பெற வேண்டும். சேற்றிலே
குழம்பி விட்டான் இம்மனிதன். இவன் திக்கிலே தெளிவு பெறவேண்டும். இப்படி நோயுடன்
மருந்தையும் பற்றிய மனத்தின் குரலே தமிழில் புதுக்கவிதையின் குரல். வாழ்வை
நையாண்டி செய்யும் எதிர்மறையில் நேசித்துக் குரல்வகை காட்டினாலும் வாழ்வின் ஆக்க
உடன்பாட்டில் கலையின் ஒளியைக் காட்டுவதாகும். ஏதேனும் குறித்த தத்துவம் இதற்கு
உண்டா என்றால் மனத்தின் தத்துவம் இது தழுவியிருப்பது எனக் கூறலாம். இந்த
மனத்தின் தத்துவத்திற்குள் எவ்வளவோ பல அறிவுத் துறைகளின் புதிய பழைய புறநிலைக்
கருத்துக்களும் உள் முகப்போக்குவரவும், வேண்டுமானால் உள்ளடங்குதலும் செய்வது
உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.’
                                                               (எழுத்து 51)

     மனித வாழ்வும், சுய அனுபவங்களும் இதர பாதிப்புகளும் ஏற்படுத்துகிற
மனப்பதிவுகளையும் கருத்தோட்டங்களையும் கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள்
தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக எழுதி வந்தவர்களோடு,
அவ்வப்போது புதியவர்கள் சிலரும் இம்முயற்சியில் ஆர்வத்தோடு இறங்கினார்கள்.

     இவர்களது படைப்புகளுக்கு ‘எழுத்து’ நல்ல ஆதரவு தந்தது; பாராட்டத் தகுந்த,
ரசனைக்குரிய, இக்கவிதைகள் பலவற்றையும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பது இயலாத
காரியம் ஆகும்.

     என்றாலும் முக்கியமான ஒரு சிலவற்றை அவற்றின் தனித்தன்மைக்காக-எடுத்து
எழுதவேண்டியது அவசியமாகிறது.

     சுந்தர ராமசாமி எழுதிய ‘காலம்’ (எழுத்து 51) அருமையான கவிதை ஆகும்.
 
  ‘மணியின் முள்ளில் காலமில்லை.
காலமோ-’
 
என்று துவங்கும் அந்தக் கவிதை சிறிது நீளமானதுதான். கருத்தாழமும் நயங்களும் நிறைந்த
அக்கவிதையில் காலத்தைப் பற்றி எண்ண ஓட்டம் படிப்படியாக வளர்கிறது. பிற-
 
  மாயை என்றான் சங்கரன்!
அல்ல, மாயையும் அல்ல வென்றான்.
அரவிந்தனோ லீலை என்றான்,
லீலை தானோ என்று கேட்டான்
அறிந்தறிந்து
தத்துவப் பாகனையே கொல்லும்
யானை அது