| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 122 |
பிக்ஷு வின் 1960 காலக் கவிதைகளை ‘இரண்டாவது கட்டக்கவிதைகள்’ என்று மொத்தமாக, தனியாக, ஆராய வேண்டும் என, அவரது முதல் கட்டக் கவிதைகள், (1934-1964) பற்றி எழுதியபோதே குறிப்பிட்டிருக்கிறேன். ஆகவே, ந.பி.யின் கவிதைகள் பற்றிய என் எண்ணங்களை இத்தொடரில் அங்கங்கே நான் குறிப்பிடவில்லை. ‘வழித்துணை’ பற்றியும் அப்படியே. புதிதாகக் கவிதை எழுத முற்பட்டவர்களில் நா.வெங்கட்ராமன் புதிய எண்ணங்களை தம் படைப்புகளில் கொண்டுவர முயன்று வெற்றியும் பெற்றுள்ளார். இயற்கைக் காட்சிகளோடு விஞ்ஞான உண்மைகளையும் கவிதைப் பொருளாக்க வேண்டும் எனும் புதுக்கவிஞர்களின் துடிப்பு அவருக்கு உண்டு என்பதை அவரது படைப்புகள் காட்டுகின்றன. ‘பிரசவம்’ என்ற கவிதையை ஒரு உதாரணமாகக் கூறலாம். | | ரவிக்கையின் சூடு கடல் நீரைப் புகையாக்கி விண்ணேற்ற காற்றோட்ட, மலை மறிக்க மழை பெய்யும் மலை உச்சி மழை நீரை புவி ஈர்க்க அது பேரருவியாகி கொட்டும்: கொட்டும் அதனடியில் குளிப்பதும், மகிழ்வதும் நான் நீ மட்டுமா? விஞ்ஞான மருமகள் டைனமோப் பெண்ணாளும் அருவியில் குளிக்கின்றாள். ‘குளிக்காமல்’ கருவுறுதல் குவலயத்தில் கண்டதுண்டு, மருமகளோ குளித்துக் கருவுறுகின்றாள். வட்ட வரிசைப் பற்கள் புளி மாங்காய் கடிக்கவில்லை, பச்சரிசி மெல்லவில்லை வயிற்றில் கனக்கவில்லை, ஆனாலும் ஓர் கணத்துள் பெற்றெடுத்து விடுகின்றாள்- ஏழு பாலுக் கழுதால் அவளது தாமிரக்காம்பில் மின்பால் சுரக்கும் | | |
|
|