| கல்பட்டுக் கீறலுற்ற ரசம் போன கண்ணாடி முகக்கொடிக்கு ஒரு கணத் தயக்கத்தேர் ஈந்து சென்றான் இன்றைய பாரி. |
| (எ-76) |
‘சாதனை’ என்றொரு கவிதை. |
| வேதனை வண்ணான் இன்னொரு சாதனை செய்தான் வெளுத்து வாங்கி விட்டான் கறுத்த மயிரை |
| (எ-80) |
மூன்று வரிகளிலும் கவிதையை உருவாக்க முடியும் என்று முயன்று வெற்றி கண்டிருக்கிறார். |
| 1 பார்த்தேன் வெள்ளைப் பூவேலை வார்த்த சோளி முதுகை தெரிந்தது முகமே. 2 கம்பி என்று காலிரண்டும் எம்பி வீழ்த்தவும் இளித்தது கம்பி யதன் நிழல். 3 மிரண்ட குதிரைத் தடதடப்பா முரட்டுத் தரையதில் காற்றின் சருகுக் குளம்பொலி. |
(எ-94) |
‘கொலைகாரர்கள்’ என்ற கவிதை மனித வர்க்கத்தில் காணப்படும் பல ரகக் கொலைகாரர்களையும் அறிமுகம் செய்கிறது. எல்லாக் காலத்தையும் சேர்ந்தவர்கள் இவர்கள். 1. புகழாசை பிடித்தாட்ட போர் மீது சென்று எண்ணற்றோரைக் கொன்று வெற்றி வீரன் எனப் பெயர் பெற்ற கொலைகாரன். 2. மதம், கடவுள் என்று பேசி நாலாயிரம் பேர்களைக் கழுவேற்றினவர்கள். |
| 3. மூன்றாவதாக நாகரிக ரகம். கள்ளிலே போதையில்லை. சதையெழில் தளும்பித் தளும்பி வழியும் கன்னியில் போதையில்லை; கண்முன் தெரியாமல் காற்றாகக் காரை ஓட்டுவதில் தான் என்ன போதை! மரம் வீடு வண்டி பாய்ந்தோட கையை ஹாரனில் அழுத்தி, |