| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 144 |
| கண்ணைப் பாதையில் வைத்து, பல்லை உதட்டில் தைத்து 60, 70, 80, 95-ஐயோ! வண்டி நின்றது மனிதப் பிணம் நிறுத்த. 4. கள்ள நோட்டுக்களை நல்ல நோட்டுக்கள் என்று தள்ளி விடுவோர். 5. உண்மையும் போலியும் ஒன்று தான் வாங்குவது என்னவென்று தெரியாமல் வாங்கும்போது எல்லாமே ஒன்றுதான்; கிடைத்தால் போதுமென்று தவிக்கிறார்கள். பழியேற்க உண்டு கடவுளும் டாக்டரும், நமக்கோ உண்டு லாபம். ஒன்றுக்கு நூறு. போ, மருந்தைக் கடைக்கு அனுப்பு. | 6. கு.ப.ராவின் ‘ஆற்றாமை’ கதாநாயகி சாவித்ரி மாதிரி; தான் அனுபவிக்கக் கிட்டாத இன்பத்தை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பொறுக்காமல் குறுக்கிட்டு ஊறு செய்து திருப்தி காண்கிறவர்கள். | | கொலைகாரனின் தத்துவம்!- இதுக்கென்ன பெரிய வாதம்? நான் கொலைகாரன் தான். பல கொலைகளைச் செய்தவன்தான் அப்போது, கழுத்தை அறுத்த போது வெள்ளரிப் பழத்தை அறுப்பது போல் அறுத்தபோது நான் கடவுளாக இருந்தேன் நான் நினைத்தால் உயிர் கொடுக்கலாம், போக்கலாம், நீங்கள் யாரும் கொலைகாரன் ஆனதில்லை; அதனால் நீங்கள் யாரும் கடவுள் ஆனதில்லை! | | (எ-95) | ‘நரகம்’ என்ற கவிதை பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். மேலைநாட்டு நாகரிக வாழ்வை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாமலும் கீழ்நாட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு விட்டுவிட இயலாமலும் திண்டாடுகிற இந்த நாட்டின் இன்றையப் பெருநகரத்தில் வசிக்கிற ஒருவனின் உணர்ச்சிக் குழப்பங்களை அது வர்ணிக்கிறது. காம உணர்வைத் தூண்டி விடுகிற சூழ்நிலைகளும், சினிமா இலக்கியம் கடற்புறம் போன்றவைகளும்-அனுபவிக்க ஆசை இருந்தும் வசதிகள் இல்லாமல் ஏங்கித் தவிக்கிற ஒரு இளைஞனின் உள்ளத்தை, உணர்வுகளை, நினைப்பை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை அக்கவிதை திறமையோடு சித்திரிக்கிறது. ‘வரும் போகும்’ எனும் நெடுங்கவிதையில் காணப்படுகிற சூழ்நிலையும் வாழ்க்கையும் அதேதான். ஆனால் கவிதைத் தலைவன் வேறு ரகம். அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு வீடு சேரும் துடிப்புடன் வந்து, பஸ்ஸுக்காகக் காத்து நிற்கும் ஒருவன்-இளமை குன்றியவன் | | |
|
|