காலாண்டு ஏட்டில் | ‘எழுத்து காலாண்டு ஏடு ஆக; 1968 - 69 இரு வருடங்களில் எட்டு இதழ்கள் வெளிவந்தன. இவ்இதழ்களில் கவிதை எழுதியவர்களில் ந.பிச்சமூர்த்தி, தி.சோ. வேணுகோபாலன் சி.சு. செல்லப்பா தவிர மற்ற அனைவரும் புதிதாகப் படைப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களே ஆவர். பிச்சமூர்த்தி சிந்தாமணி பில்வமங்கள் காதல் கதையை ஆதாரமாகக் கொண்டு, ‘காதலின் இரவு’ என்ற குறுங்காவியம் படைத்திருந்தார். இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைப் படைப்பு இது. இவ் மரபு வழிக் காவியம். எழுத்து 119 ஆம் ஏட்டில் பிரசுரமாயிற்று. தி.சோ. வேணுகோபாலனின் கவிதைகள் தற்கால வாழ்க்கை அவலங்களை பரிகாசத் தொனியோடு சுட்டிக் காட்டின. ‘குருவி’ என்றொரு கவிதை. காது கிழிபட கீச்சிட்டுக் கொம்மாளமிடும் குருவியை நோக்கி மனிதன் எரிச்சலுடன் கூறுகிறான்.. | | ஊர் நிலவரம் உனக்கெங்கே தெரியும்? வாராவாரம் விரதம் இருந்து வயிற்றுத்தீ அவிக்க வயிறெரிந்தது வாங்கி வரும் ‘பல சரக்கில்’ அரிசி மணி பொறுக்கி அரைக் குருடாய்ப் போயாச்சு! ‘காக்கைகுருவி எங்கள் ஜாதி’!?! அவனுக்கென்ன? பாடினான்! அகத்துக்காரி அடுத்த வீட்டிலிருந்து யாரும் அறியாமல் கூனிக் குறுகி கடன் வாங்கி வந்த அரிசியை முற்றத்தில் இறைத்து உங்கள் மாநாடு கூட்டி மகிழ்ந்து கரம் கொட்டி பாடினான்! அவன் பட்டினி கிடந்தான்; ஆனாலும் ஊரெல்லாம் அன்னதானம் நடந்தது; அந்தக் காலம்! ‘படி’ அரிசிப் பேச்சால் | | |
|
|