பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 158

  வேதாந்தியின் இதயம் வேண்டாம் எனக்கு
அது இப்போ வறண்டு போய் கிடக்கு.
விஞ்ஞானியின் இதயம் வேண்டாம் எனக்கு
அதன் சிறப்பான பணி அழிவுக்கு!

     ஒரு புது உறவில் எல்லோருடனும் உறவாட அவருக்கு ஒரு இதயம் வேண்டும்.
அவரிடம் உள்ளது `நாள்பட்ட சரக்குழு.

  `இகத்துக்குப் பயன்படாத சரக்கு,
பரத்துக்கு வழி சொல்லத் தெரியாது;
வாழத் தெரியாத சரக்கு
சாகத் துணியாத சரக்குழு

 

     அதனால் மாற்று இதயம் கேட்கிற அவருக்கு..

  ஒரு குழந்தை இதயம் வேண்டாம்
அதுக்கு கபடம் தெரியாது;
ஒரு வாலிபன் இதயம் வேண்டாம்
அதுக்கு நிதானம் தெரியாது;
ஒரு நடு வயது இதயம் வேண்டாம்
அதுக்கு எதிலும் சந்தேகம்;
ஒரு கிழட்டு இதயம் வேண்டாம்
அது கூரு கெட்டிருக்கும்.

 

     `என் தேவையைச் சொல்லிவிட்டேன்ழு என்பவர் உணர்கிறார். `தேவை இல்லாதவை
மட்டும்சொல்லிவிட்டேனா? என்று.

  ஓ, மன்னிக்கவும் நான் எதிர்மறை விமர்சகன்.
`உடன்பாடான பார்வை எனக்கு இல்லையாம்ழு
இந்த உடன்பாடும் எதிர்மறையும்-
எதுக்கு எது உடன்பாடு;
எதுக்கு எது எதிர்மறை?

 
     அதன்பிறகு கவி டாக்டரை நோக்கித் தன் சந்தேகங்களை வெளியிடுகிறார். மூல
இதயத்துக்கும் மாற்று இதயத்துக்குமுள்ள வித்தியாசம் என்ன? பழைய இதயத்தோட
போனது என்ன? மாற்று இதயத்தில் இருந்து, அவனுக்குள் நுழைந்தது என்ன?

 
  ஆமாம்; அவன் மனிதனாக நடமாடுவான்,
அதே மனிதனாகவா?
இவனுக்குத் தன் இதயத்தைக் கொடுத்தானே
அவன் இதயத்தில் இருந்ததை எல்லாம்
இவனுக்குள் அடைத்து மூடிவிட்டபின்
இவன் நடமாடுவான் அதே மனிதனாகவா!

 
     டாக்டர் செய்தது பெரிய தவறு, அது ஒரு பாதகம் என்ற அறிவு விழிப்பு
அவருக்கு ஏற்படுகிறது.

 
  பழுத்த இதயம் அழுகி விழுந்த அவனுக்கு
சாவு இனிப்பை அளித்திருக்குமே;