பக்கம் எண் :

159  வல்லிக்கண்ணன்

  காயாக விழுந்தவன் புது இதயம்
புளிப்பையே தொடர்ந்து தருமே.
புளிப்பும் திதிப்பும் இருவகை ருசி ஆனாலும்
புளிப்பு வேறு திதிப்பு வேறு.
புளித்த வாழ்வை தொடரவா
அவனுக்கு மாற்று இதயம்?
 
     உடன்படும் எதிர்மறையும்- புளிப்பும் திதிப்பும்- இன்னதெனப் புரிந்துவிடுகிறது
அவருக்கு. இவை இல்லாத மாற்று இதயம் வேண்டும்; யாரிடமிருந்து கிடைக்கும் என்று
கேட்கிறார்.

     மேலும் வருகிறது ஒரு பின் குறிப்பு-
 
  ஓ டாக்டர்” மன்னிக்கவும்.
மாற்று இதயம் வேண்டாம் எனக்கு.
எவன் உணர்ச்சியும் தேவையில்லை எனக்கு.
என் இதயம் பாடம் கற்றிருக்கு.
அது தன் வழியே போய் ஒடுங்கட்டும்.
 
     ஓ டாக்டர், உங்களுக்குத் தொந்திரவு தந்தேனோ மன்னிக்கவும், சுவாரஸ்யமான
இந்தக் கவிதை வாழ்க்கை உண்மைகளை சிந்திக்கச் செய்கிறது.

     செக்நாட்டில் சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்த போது செல்லப்பா ‘இரணியம்
பிறப்பதோ?’ என்றொரு கவிதை எழுதினார். (எழுத்து 113) ரஷ்யப் புரட்சியை வரவேற்று
முழக்கம் செய்த கவி பாரதியின் வரிகள் இதில் மிகுதியாக எடுத்தாளப் பட்டிருப்பது தவிர,
பாராட்டத் தகுந்த நயங்கள் எவையும் இக்கவிதையில் இல்லை. எழுத்து 114 -ஆம் ஏட்டில்
செல்லப்பா சிரமப்பட்டு இயற்றிய 2000 வரிகள் கொண்ட குறுங்காவியம் ‘நீ இன்று
இருந்தால்’ பிரசுரமாயிற்று ‘மனிதர்க்கெல்லாம் தலைப்படு மனிதன்’ மகாத்மா காந்தியின்
வாழ்க்கை சரித்திரமும் சாதனையும் பற்றியே நெடுங்கவிதை இது.

      உலக இலக்கியங்களைப் புரட்டிப் பார்த்தால் அங்கங்கே நெப்போலியன் காலம்,
பிரெஞ்சுப் புரட்சி, நாட்கள், ரஷ்யப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டு யுத்தம் நடந்த கட்டம்
சம்பந்தமாக எல்லாம் நாவல்கள், நாடகங்கள், கவிதைகள் இயற்றப் பட்டிருப்பதைப்
பார்க்கிறோம் ஆனால் நம் தமிழ் இலக்கியத்திலோ கல்கி ஆரம்பித்து வைத்த சேர, சோழ,
பாண்டிய, பல்லவ காலத்து கற்பித சூழ்நிலையைத் தாண்டி வரவில்லை. இன்னும், கிழக்கு
இந்தியக் கம்பெனி நாட்களுக்குக்கூட வரவில்லை. அப்படி இருக்க, காந்திகால சுதந்திரப்
போராட்ட நாட்களுக்கு எப்போது வருவோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? அந்தக்
காலத்தை சாட்சிக்காரனாக நின்று பார்க்கும் ஒரு பார்வை, ஒதுங்கி நின்று அந்த நாட்களை
மதிப்பிட்டுப் பார்க்கும் சக்தி. படைப்புக்கு அதைப் பயன்படுத்தும் திறமை இன்னும் தமிழ்ப்படைப்புத் துறையில் ஏற்படாததே காரணமாக இருக்கக்கூடும்’ என்று செல்லப்பா சிந்தித்து
மனப்புழுக்கம் வளர்த்திருக்கிறார்.

     அதன்மீது காந்திஜியின் வரலாற்றையும் சாதனையையும் அவரது மரணத்துக்குப்
பிந்திய நிலைமைகளையும் தன் பார்வையில்