| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 16 |
| காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான்! கை புதிதா, கார் புதிதா? இல்லை ! நாள் தான் புதிது, நட்சத்திரம் புதிது! ஊக்கம் புதிது, உரம் புதிது! மாட்டைத் தூண்டி, கொழுவை அழுத்து. மண் புரளும் மழை பொழியும்! நிலம் சிலிர்க்கும் பிறகு: நாற்றும் நிமிரும். எல்லைத் தெய்வம் நிலம் காக்கும், கவலையில்லை! கிழக்கு வெளுக்குது! பொழுதேறப் பொன் பரவும் ஏரடியில் நல்ல வேளையில் நாட்டுவோம் கொழுவை | | | பெண்மையை வியக்கும், பெண்ணை எண்ணி ஏங்கும், அகத்துறைக் கவிதைகளையே கு.ப.ரா. அதிகம் எழுதினார். ‘கருவளையும் கையும்’, ‘பெண்ணின் பிறவி ரகசியம்’, ‘விரகம்’ போன்ற பல இனிய கவிதைகள் ரசிகர்களுக்கு மகிழ்வூட்டும் படைப்புக்கள் ஆகும். | கிராமியக் காதலர்கள் பற்றி, கிராமியப் பாங்கான முறையில் கவிதை எழுதுவதிலும் கு.ப.ரா. உற்சாகம் காட்டினார். நல்ல வெற்றியும் கண்டார்.அவரது அந்த ஆற்றலுக்கு ஒரு உதாரணம் ‘ராக்கி நெனப்பு’. (1939 - மணிக்கொடி, ஏப்ரல்15) | | | குட்டி அவ என்ன சோக்கு என்ன ‘சோரு’ தெரியுமா? தீண்டாத சாதியவ கலியன் சாம்பான் பொண்ணுடா! பட்டிக்குச்சு மோட்டு மேலே பூத்த பறங்கி போலே ஏண்டா அங்ஙணெ போயி பொறந்தா கட்டுக் கொண்டெக்காரி? மட்டசாதி ஈனசாதி எண்ணு ஆர்ரா சொன்னவென்? அவனெக் கொண்டு அவமுன்னே நிறுத்தி யல்ல பாக்கணும்! கெட்ட பயமவடா அவ என்ன மயக்கு மயக்கரா! மவராசி போலே அவ மவா ராங்கிக்காரி! ஓடக்கெர மரத்துங்கீளே உருமத் துநேரம் மாட்டை ஓட்டி மேயவுட்டு படுத்திருக்கையிலே | | | |
|
|