பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 162

நடை

    
     ‘எழுத்து’ காலாண்டு ஏடு ஆக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ‘எழுத்து’வின்
போக்கில் அதிருப்தி அடைந்துவிட்ட இளைய நண்பர்கள் சிலர் ‘நடை’ என்ற பெயரில்
‘இலக்கிய முத்திங்கள் ஏடு’ ஒன்றை ஆரம்பித்தார்கள், அக்டோபர் 1968ல் தோன்றிய
‘நடை’ சேலத்திலிருந்து வெளிவந்தது. “நடை இலக்கிய முத்திங்கள் ஏடு. இலக்கியப்
படைப்புக்கும் திறனாய்வுக்கும் என்றே வருகின்ற ஏடு. இதுபோன்ற ஏடு தமிழுக்குப்
புதிதல்ல. என்றாலும் நடை பல வகையிலும் மாற்றம் உடையது. இந்த மாற்றம் நடையினது
நோக்கத்தின் அடிப்படையில் எழுவதாகும். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு
வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த
வேண்டும் என்பதே நடையின் நோக்கம். இந்த இருவகை வளர்ச்சியிலும் நாட்டம் கொண்ட
நண்பர் சிலரின் கூட்டு முயற்சியே இந்த நடை” இது ‘நடை’யின் முதல் இதழில்
காணப்பட்ட அறிவிப்பின் ஒரு பகுதி ஆகும்.

     ‘எழுத்து’ இதழ்களில் முன்பு எழுதி வந்த நண்பர்கள் தான்--சி.மணி, ந. முத்துசாமி,
எஸ். வைத்தீஸ்வரன், இரா. அருள், வி.து. சீனிவாசன் ஆகியோரே’- ‘நடை’யின் இதழ்களில்
அதிகமாகவே எழுதினார்கள். ஐராவதம், ஞானக்கூத்தன்,புதிதாக வந்தவர்கள்.மற்றும்,
அசோகமித்திரன் நகுலன், மா. தஷிணாமூர்த்தி, நீல பத்மநாபன். கோ. ராஜாராம்
படைப்புகள் அவ்வப்போது பிரசுரமாயின. வெ. சாமிநாதன் கலாநிதி க. கைலாசபதியின்
மார்க்சீயக் கண்ணோட்ட விமர்சன முறையை ஆராயும் நீண்ட கட்டுரையை ‘மார்க்ஸின்
கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினார்.

     ‘நடை’ ஓவியம், கலை சம்பந்தமாகவும் கருத்து தெரிவித்து, கட்டுரைகள் பிரசுரித்தது. புத்தக விமர்சனம். மொழி பெயர்ப்பு விஷயங்களும் உண்டு. நாடகம் படைப்பதிலும் ஆர்வம் காட்டியது. ‘நடை’ எட்டே எட்டு இதழ்கள் தான் வந்தன. அது நடை பெற்ற இரண்டு வருஷ காலத்தில் இலக்கியத்தையோ எழுத்தாளர்களையோ பாதிக்கும் படியான பெரும் சாதனைகளை ‘நடை’ புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. சிறுகதையில் ‘நடை’ கணிசமாகவோ, நினைவில் நிற்கும்படியாகவோ எதையும் தந்ததில்லை.

     தமிழ் இலக்கியம் சம்பந்தமான ‘ஆய்வுக்’ கட்டுரைகள் சில வந்துள்ளன. திரைப்படப்
பாடல்களின் இலக்கியத் தன்மை குறித்து, முதல்முறையாக சிந்தனையைத் திருப்பி விடத்
தூண்டும் நல்ல கட்டுரை ஒன்றும் வந்தது. இதை ‘செல்வம்’ தான் எழுதியிருந்தார்.
பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியும் புதுக்கவிதைப் படைப்பில் நல்ல தேர்ச்சியும் பெற்றிருந்த
சி. மணிதான் செல்வம் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தார். (சி. மணி என்பதே புனை
பெயர்தான்) செல்வம்