என்று இலக்கிய பிரச்னைகள் குறித்துக் கட்டுரைகள் எழுதிய அவர் நடையில் வே.மாலி என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். ஆகவே, நடையில் சி.மணியின் சாதனைகளே மிக அதிகமானவை. ‘நடை’யின் முதன்மையான-முக்கியமான சாதனை அதன் மூன்றாவது இதழில் ‘யாப்பியல்’ என்ற கட்டுரையை (52 பக்கங்கள்) இணைப்பாக வெளியிட்டது ஆகும். இந்த யாப்பியலை எழுதியவர் செல்வம். இது பயனுள்ள ஆய்வும் விளக்கமும் ஆகும். யாப்பின் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, பற்றிய இலக்கணம் பாவினம், பாவகைகள், பற்றிய விளக்கங்கள், யாப்பு இலக்கணம், படைப்பாளிகளுக்கு தரும் உரிமைகள், நெகிழ்ச்சிகள்; இவை போதாமல் படைப்போர் மேலும் பயன்படுத்தும் உரிமைகள் பற்றி எல்லாம் செல்வம் தெளிவாகவும் எளிய நடையில் விளக்கமாகவும் விவரித்திருக்கிறார். இக்கட்டுரையில். “யாப்பையும் மரபையும் மீறியதாகப் புதுக்கவிஞர்கள் கூறுவதும் அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை; அவர்கள் மீறியே விட்டதாக நினைத்துக் கொண்டு பலர் புறக்கணிப்பதும் அவ்வளவு சரியானதாகத் தெரியவில்லை. இப்படிச் சொல்வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பலவகைச் சீர்களைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்றால் சீர்வகையிலும் எண்ணிக்கையிலும் கருத்து வேறுபாடு உண்டு. மேலும் வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும், எல்லாப் பாவின வகைக்கும் நிச்சயமான சீர்வகை வரையறை இல்லை. எனவே சீர் மயக்கம் புதிதல்ல; மரபானதே. பலவகைத் தளைகளைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல. ஏனென்றால், வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும் பாவின வகைக்கும் தளைவரையறை இல்லை. எனவே, தளைமயக்கம் புதிதல்ல; மரபானதே, பலவகை அடிகளைக் கலந்து எழுதுவது மரபை மீறுவதல்ல, ஏனென்றால் வெண்பாவைத் தவிர மற்ற பாவகைக்கும் அடிவகை வரையறை இல்லை. எனவே அடி மயக்கம் புதிதல்ல; மரபானதே. எதுகை மோனை இல்லாமல் எழுதுவது மரபை மீறுவதல்ல, தொடைவகை இரண்டல்ல; பல ஆகும் ‘சொல்லிய தொடையின் பாட்டியலின்’, அதையும் செந்தொடை என்பது வழக்கம். செந்தொடை உள்ளிட்ட தொகை வகையான 13699லிருந்து கவிதை தப்புவது அருமை. ஈரடி உருவம், மூவடி உருவம், நாலடி உருவம் மரபையே ஐந்தடி முதல் அடிவரையறையின்றி நடப்பதும் மரபே, நான்குவகைப் பாக்கள் கலப்பதும் மரபே. பாட்டிலே அசையோ சீரோ அடியோ கூனாக வருவதும் மரபே. தொல்காப்பியம் பாட்டிலும் உரைநடை பொருட்குறிப்பாக வரும் என்கிறது. எனவே, உரைநடையாக ஒலிக்கின்ற பகுதியும் பாட்டில் வருவது புதிதல்ல, மரபானதே, ஒரு குறிப்பிட்ட விதியை மீறுவதும் புதில்ல; மரபானதே | | கி யூ வி லே ஒரே கூட்டம் | | |
|
|