பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 166

  னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை.
                         (மினியுகம் - வே. மாலி நடை 3)
மேற்கு ஜெர்மனிக்குப் பட்டம்
ஏற்று மதியாகின்றன
மற்ற நாடுகளும் கூட இ
வற்றை வாங்கலாம் காகிதப்
பட்டம் இரண்டு மூன்று டாலர், பிளாஸ்டிக்
பட்டம் ஐந்தாறு டாலர்; பல்கலைக் கழகப்
பட்டம்? விலை மதிப் பற்ற மாபெரும்
வட்டம்,
                                        (நாளுக்கு நாள்)
இலக்கியம் என்றால் என்ன என்றேன்.
புலவர் ஒருவர், இது கூடத் தெரியாதா
இலக்கு கூட்டல் இயந்தான் என்றார்.
(உங்களுக்குத் தெரியுமா நடை -4)
அன்று மயிற் பொறி மற்றும் அணுவைக்
கண்டு பிடித்த அலுப்பில் படுத்துக்
குறட்டை விட்ட நாம், இன்று
உறக்கம் நீங்கி எழுந்து
கண்டு பிடிக்கக் கிளம்பி விட்டோம்,
டிஎன்டி, டிஎன்ஏ முதலிய எல்லா
மேற்கத்திய- களுக்கொப் பானதமிழ்ச்
சொற்களை.
                                   (கண்டுபிடிப்பு நடை-4)
 
இவை சில உதாரணங்கள்.

     நாட்டு மக்களிடையே மண்டி வளரும் சிறுமைகளையும், குறைபாடுகளையும் கண்டு
பழித்துப் பரிகசிக்கும் ‘ஸட்டயர்’ தொனியே, மாலியின் கவிதைகளில் மேலோங்கி நிற்கிறது.
சில மென்மையான பரிகாசமாகவும், சில முரட்டுக் கிண்டலாகவும் அமைந்து விடுகின்றன.
‘பூ இவ்வளவு தானா’ கேள்வியே பதில் ஆகுமா? ‘தலைமுறை தலைமுறையாக’
‘மணக்கணக்கு’ ‘அழைப்பு’ நாட்டியக்கலை’ போன்றவை இத்தகையன. ரசிப்பதற்கு உரிய
அருமையான படைப்புகள், அவற்றை எல்லாம் முழுமையாக எடுத்தெழுதுவதற்கு
இடமில்லை.

     புதுமையான உள்ளடக்கம், பரிகாசத் தொனி,வேகம் உருவநலம் நிறைந்த
கவிதைகளை ஞானக்கூத்தன் ‘நடை’யில் அதிகமாகவே எழுதியிருக்கிறார்.
 
  வாரத்துக் கொன்றிரண்டு வெளியூர் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர், மாலை, துண்டு.
காரத்தில் பேசத் துப்பாக்கிச் சூடு
கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு;
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப்பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
(தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்)