பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 168

  என்னும் நமது கவின் கலைகள்
ஏதுமுண்டோ அவர் நாட்டில்?
ஆனால்
முனியன் கோயிற் குதிரைகளும்
நாக்கு தொங்கி, குறி விறைத்த
உள்ளூர்க் கோயில் யாளிகளும்
வாங்கறானாம் வெளிநாட்டான்
அதுதான் தொடக்கம் படிப்படியாய்
அவரும் நாமும் இணையாக
 
     ‘இணையும் கோடுகள்’ என்ற இக் கவிதையில் அந் நயங்களைக் கண்டு கொள்ளலாம்.

     எஸ். வைத்தீஸ்வரன் மா. தக்ஷிணாமூர்த்தி, தி. சோ. வேணுகோபாலன், சி.அ. சச்சிதானந்தம், கோ. ராஜாராம், பிரமில் பானு சந்திரன் கவிதைகளையும் ‘நடை’ கிரசுரித்தது. ஏ. இக்பால், சிவா, சிவம், என்ற பெயர்களில் ஒவ்வொரு நல்ல கவிதை வந்திருந்தது இவை நன்றாகக் கவிதை எழுதித் தேர்ச்சி பெற்ற எவருடைய புனைபெயராகவும் இருக்கக் கூடும்.

     மொத்தமாகப் பார்க்கிறபோது ‘நடை’ தனது இரண்டு வருஷ வாழ்வில் கவிதைக்குச் சிறப்பாகப் பணியாற்றியிருப்பது தெரியவரும், இது பாராட்டப்பட வேண்டிய சாதனைதான்.