பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 170

ஸ்ரீனிவாசன் 3, வல்லிக்கண்ணன் 4, ஷண்முக சுப்பையா 43, மா. தக்ஷிணாமூர்த்தி
2, நகுலன் 1. கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் ஸி. ஜேசுதாசன்
பிளேக் கவிதை ‘ஆட்டுக்குட்டி’யையும் வேறு இரண்டு ஆங்கிலக் கவிதைகளையும் (மரம்,
விளையாட்டுப் பிள்ளை) தமிழாக்கியுள்ளார். இனிய எளிய தமிழ்க் கவிதைகள்.

     ‘கேரளத்தில் புதுக்கவிதை இயக்கத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இயங்கும்’
ஐயப்ப பணிக்கர் எழுதிய ‘சாப விமோசனம்’.
 
  வந்தனவே சுபதினங்கள்;
காத்துக் காத்திருந்தென
சின்ன அகல்யைக்களுக்கின்று
சாப விமோசனம் தானே,
எந்தக் காட்டருவியும்
கங்கை தானிப்போ;
ஓருவெறும் ஜலபிந்து
கூடத்தான் மகா தீர்த்தம்,
 
என்று ஆரம்பமாகி வளர்கிறது.
 
  சாபசை தன்யத்தால் பெண்மை
கல்லாகிக் கிடக்கையில்
பூமிப்புதல்விக்கு அனூராகம்
எங்ஙனம் தோன்றிடும்?
 
என்று கவி கேட்கிறார். ராமன் லக்ஷ்மணனை விளித்துச் சில எண்ணங்களைக் கூறுகிறார்.
 
  என் மனதில் மலர்ச்சிதான்
பிரீதிதான்; ஒளியில்
வர்ணஎழில்கள் குழுமி
பூமணம் கமழ்ந்தது.
இக்கொடும் பாறைத்திறன்
காலின் கீழ் அழுத்தி நீ
மானிடபுத்ரா, உன் ஆத்ம
உணர்வை வளர்க்கையில்
செல்வியாம் அவனியும்
வளர்க்கும் தாரகைகளும்
உற்சவம் கோஷிக்கின்றன;
சாபமுக்தனானேன் நானும்!
 
என்று கவிதை முடிகிறது. சிந்திக்க வைக்கும் நல்ல கவிதை இது. பணிக்கரின், ‘சாவு பூஜை’
 
  ஹே மந்த காமினி
(ஹே மெதுநடையாளே!)
ஹேமந்த யாமினி
கனசியாமரூபிணி
நீ வாராய்