பக்கம் எண் :

171  வல்லிக்கண்ணன்

என்று பிறந்து வளர்கிறது.

     உலக நியதிகளையும் மனித இயல்புகளையும் பரிகாசத் தொனியோடு சுட்டிக்காட்டி
வளரும் கொஞ்சம் நீளமான கவிதை இது.
 
  ‘நாளையின் பாட்டை நான்
பாடவில்லையோ?
தருக நாணயம்.,
இதுதான் என்
சுதந்திரப் பாடகன்
எங்கேயோர் போருண்டு
எங்கேயோர் பஞ்சமுண்டு
என்று கேட்பினும்
கவிதை தீட்டி
அதையும் காசாக்குவான்
பொதுமக்கள் இதத்திற்காய்ப்
பிறவி பெற்று வாழ்பவன்.
கண்ணியமே கொள்கையாக்கி
மேலுடையின் கோடியில்
ஜரிகை நகை இழைக்கின்றான்
அறத்தின் பிரசாரகன்.
தேகமிது அநித்யம்’
எனவே
‘இன்றைக்கு
தருவாய் நின் சுகத்தை’
என் கின்றான் அன்புப் பிரவாசகன்.
ஹேமந்த காமினி
ஹேமந்தயாமினி
சரத் சொப்பன காமினி
நீ வாராய்.
 
என்று ‘மிருத்யு பூஜை’ பண்ணுகிறார் கவி. நீல பதம்நாபன் மொழி பெயர்ப்பு
இனிமையாகவும் நயமாகவும் அமைந்துள்ளது.

     மனிதனின் பலநிலைத் தூக்கங்களை எடுத்துக்கூறும். ‘தூக்கம்’ மற்றும் நெருப்புக்குச்சி
சிலை’ ‘?’, சரணாகதி என்ற கவிதைகளும் நீல பத்மநாபன் படைப்புகள். ‘சரணாகதி’ சிறிது
நீளமான கவிதை. வாழ்க்கையில் காணப்படும் கசப்பான உண்மைகளை கவிதைச்சுவையோடு
அவர் இதில் வர்ணித்திருக்கிறார். அவருடைய கவிதைகளுக்கு ஒரு உதாரணமாக ‘?’
என்பதை இங்கு தருகிறேன்.
 
  பிறவிக்கு நன்றி?
பெற்றோருக்கு!
வளர்ச்சிக்கு நன்றி?
அவர்களுக்கே!
கல்விக்கு நன்றி?
ஆசானுக்கு!