பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 172

  கல்விக்கு நன்றி?
மனைவிக்கு!
பதவிக்கு நன்றி?
அரசுக்கு!
பாசத்திற்கு நன்றி?
உடன்பிறப்புக்கு!
நட்புக்கு நன்றி?
நண்பருக்கு!
அருளுக்கு நன்றி?
இறைவனுக்கு!
கொள்ளிக்கு நன்றி?
குழந்தைக்கு!
சாவுக்கு நன்றி?
    ?
 
     நயமான கவிதைகள் பலவற்றை ‘எழுத்து’ ‘தாமரை’ இதழ்களில் எழுதித் தனது
படைப்பாற்றலை நிரூபித்துள்ள ஹரி ஸ்ரீனிவாசன், சந்திரத் துண்டுகள், அற்புதம், நொடிகள்
எனும் அருமையான படைப்புகளை இத்தொகுப்புக்கு அளித்திருக்கிறார்.

     ‘அற்புதம்’ என்ற கவிதையை இங்கு எடுத்து எழுதுகிறேன்-
 
  மாறிவரும் உலகில் மதிப்பில்லா என்மீது
தங்கக் கைநீட்டி எனையொரு பொருட்டாய்
தடவிவிடும் இளம்பரிதி!

வேதனையில் பிறந்து தன் வாய்ச்சிரிப்பால்
மாது மனம் மலர வைத்துச் சாவுக்குச் சாவுமணி யடிக்கும்
நேற்றுப் பிறந்த இளங்குழவி!

தளிரான தலைதூக்கி எம்மையெலாம் கண்டு
களுக்கென்று சிரித்துக் கண்மலரும்
மண்ணிலே இட்ட விதை!

நூலுருண்டை போலிருந்து மேலும் கீழும் தாவி
மூக்கால் மதுவருந்திப் பேடையுடன் ஆட
சீட்டி யடிக்கும் சிறுகுருவி!

வாக்கால் வசமிழந்து தம்மறிவுத் தடமாறி
போக்கான பெருவழியை விலகிக் குறுஞ்சந்தில்
தம் பெருமை பேசும் தம்பட்டம்!

ஆறறிவு படைத்தோம் அஃறிணையுமல்லோம்
ஆண்டவனின் அருமந்த புத்ரர் யாம் எனச்சொல்லி
வெள்ளிச் செருப்புமுன் செய் வணக்கம்

அநுமானைப் போலத் தன் வலிமை யுணராமல்
தினமுழைத்தும் திவலைச் சுகம் காணாமல்
தரமிழிந்து வாழும் வாழ்வு
     பனையோலைக் குடிலுக்குள்