பக்கம் எண் :

173  வல்லிக்கண்ணன்

  பிரித்தொதுக்கித் தள்ளப்பட்ட
பறைச்சிப் பெண் மார்பில்
பால்!
 
     அவரது ‘நொடிகள்’ கவிதை அழகும் கருத்துநயமும் சேர்ந்து மிளிரும் அற்புதப்
படைப்பு.
 
  கடிகாரம் இடையறாது
தட்டித் தவிக்கும்
பிடிவாதக் குழந்தைகள்
என்றும்,
 
‘முத்தாயிரம் கோத்த
மணியாரச் சரட்டில்
முத்திடை மின்னும்
தத்துவத் துண்டுகள்’
 
என்றும் ‘நொடிகள்’ பற்றி வியந்து வளரும் இம் மணிக் கவிதை படித்துப் படித்து
ரசிக்கப்பட வேண்டிய ஒன்று. அதைப் பூரணமாக எடுத்தெழுத வேண்டும் என்ற ஆசை
எனக்கு உண்டாகிறது. ஆனால் கவிதையின் நீளம் (6 பக்கங்கள்) கருதி விட்டுவிடுகிறேன்.

     ‘முடிவா முக்கியம்?’ ‘எண்ணிப்பாரு சும்மா!’ ஒரு புத்தகம், அப்படியா தோணுது?
ஆகியவை வ.க.கவிதைகள்.

     ஷண்முக சுப்பய்யாவின் கவிதைகள் ‘குழந்தைக் கவிதைகள்’ என
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெறும் ஓசை நயத்தை முதன்மையாகக் கொண்ட குழந்தைப்
பாடல்களை அவர் அதிகம் எழுதியிருக்கிறார்.
 

பச்சைக் கார்

 
பாரப்பா பார்
அதோ ஓர்
பச்சைக் கார்
அது பொப்பப்போ
போடாமல்
போவதெங்கே
சொல்லப்பா
 
போன்றவை உதாரணமாகலாம். ஆனாலும் அவர் வார்த்தை ஜாலங்கள் செய்வதோடு நின்று
விடுவதில்லை. கசப்பான வாழ்க்கை அனுபவங்களையும் உலக நியதிகளையும் சிறு சிறு
கவிதைகளாகப் படைத்திருக்கிறார்.
 
  செல்லப் பிள்ளை
செல்லப்பா
செல்வந்தராம்
அவனப்பா.
அதனால் வந்த
இறுமாப்பால்