பக்கம் எண் :

175  வல்லிக்கண்ணன்

  சாகாமற் சாகும்
நாங்கள் நாங்களே
 
மா. தக்ஷிணாமூர்த்தியின் ‘குளத்துமீன்’ புதுமையும் இனிமையும் ஓட்டமும் உணர்ச்சியும்
கலந்த நல்ல கவிதை. அவரே. ஜான் டண் என்பவரின் ‘நிழலைப் பற்றி ஒரு சொற்பொழிவு’
என்னும் கவிதையையும் தமிழாக்கியுள்ளார். காதலின் தத்துவத்தை நிழல்களோடு இணைத்து
விளக்குகிறது இது.
 
  காதல் ஒரு வளர்ச்சி,
நிலையான ஓளி.
நடுப்பகலுக்குப் பின்
முதல் விநாடி இரவு
 
என்று முடிகிறது.

     நகுலன் ‘இப்படியும் ஒரு கவிதை’ என்று நான்கு பக்க விளக்கத்துடன் ஒரு சோதனை
சிருஷ்டியை இத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்.

     ‘எந்த ஒரு எழுத்துப் பத்தியையும் எடுத்துக்கொண்டு வார்த்தைகளையும் சொல்
அமைப்பையும் மாற்றி அமைத்தால் ஒரு நூதன உருவைக் கொண்டு வரலாம்’ என்று
வில்லியம் பரோஸ் என்பார் ‘டைம்ஸ் லிட்டரி சப்ளிமென்ட்’டில் எழுதியிருந்த
கட்டுரையைப் படித்த நகுலன், அக்கொள்கையை அவர் வழியில் ஏற்றுக்கொண்டு’
ஐங்குறுநூற்றின் பல பாடல்களிலிருந்து பலவரிகளை ஒன்று கூட்டி (அவைகளுடன்
கூடியவரை, அந்த நடைக்கு ஏற்ப என்னால் இயன்றவரை என் வரிகளையும் சேர்த்து) ஒரு
கவிதையைச் செய்திருக்கிறார்.
 

இப்படி ஒரு கவிதை
நெய்தல்

 
‘காண்மதி பாண! நீ உரைத்தற்கு உரியை!’         (நெய்தல் 40)

‘யான் எவன் செய்கோ! பாண!’                  (நெ. 133)

‘ஓண்தொடி அரிவை கொண்டனள்!’               (நெ. 172)

‘இரவினாலும் இன் துயில் அறியாது
அரவு உறு துயரம் எய்துப தொண்டித்
தண் நறு நெய்தல் நாறும்
பின் இருங்கூந்தல் அணங்குற்றோரே’              (நெ. 178)
 
‘தோளும் கூந்தலும் பல பாராட்டி.
வாழ்தல் ஓல்லுமோ - பாண!
‘அம்ம வாழி! பாண’                            (நெ. 178)

‘பிரியினும் பிரிவது அன்றே-
இவளோடு மேய மடந்தை நட்பே!’               (குறிஞ்சி 207)