| | சுவையான விவாதம் |
|
க.நா. சுப்ரமண்யம் அந்நாட்களில் கவிதை எழுதுவதில் உற்சாகம் காட்டியதில்லை. என்றாலும், முதன் முதலாக யாப்பிலாக் கவிதையான வசனகவிதை சம்பந்தமாய் கருத்து மோதல்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த பெருமை அவருக்கே உரியது. |
‘சூறாவளி’ வாரப் பத்திரிகை 1939 ஏப்ரலில் பிறந்தது. க.நா. சுப்ரமண்யம் நடத்திய அப்பத்திரகை கவிதையில் அதிக அக்கறை காட்டவில்லை. ச.து.சு. யோகியாரின் படைப்பு எப்பவாவது இடம் பெற்றுக் கொண்டிருந்தது. |
என்றாலும், ‘சூறாவளி’ நான்காவது இதழில் ‘மயன்’ எழுதிய வசனகவிதை வந்தது. க.நா.சு. தான் ‘மயன்’ |
|
| மணப் பெண் | |
| திரையிட்டு மறைத்த முகமும் பெண்மை ஏசும் பட்டாடையும் மறைத்து வைக்கும் உண்மை அறியாவண்ணம் அழகி என்று அவளை அறிவ தெப்படி? அவள் அழகி ஆடை உடுத்தி அழகு படுத்தி அலங் கரித்து மணமேடை யேற்றிக் கண்டின் புற்றது நாங்கள். அவள் அழகைத் திரையிட்டு மூடுவானேன்? அழகு கண்டு கண் மங்காதிருக்க அவன் அதிர்ஷ்டங் கண்டு பிறர் பொங்காதிருக்க. பின் அவளழகை உரக்கப் பாடுவானேன்? பாட்டை நம்புவார் யார்! வெறும் சொல்லடுகக் கென்று | |