பக்கம் எண் :

19  வல்லிக்கண்ணன்

  எண்ணி ஏமாறுவார்
யாருமே என்று
அவளழகைப் பாடுவோம்

நாரியர் புடை சூழ
மேக மண்டலத்தில்
மின்னென நடக்கிறாள்-

மாலை வானத்திலே
மின்னும் சுடரெனவே
மணவறை சேருவாள்-

அவன் கூடுவான்
அழகுடன்
அழகு பொருந்த.

 
 
     இந்தக் கவிதையைக் குறை கூறி ஒரு கடிதம் ‘சூறாவளி’ ஆறாவது இதழில்
பிரசுரமாயிற்று. ‘மகராஜ்’ என்பவர் எழுதியது.
 
     ‘சூறாவளியில் ‘மயன்’ எழுதிய பாட்டைப் படித்தேன். ஆங்கிலத்திலும், பிற
பாஷைகளிலும் இந்தப் புதிய மோஸ்தரில் இது போன்ற பாட்டுகள் வெளிவருவதைப்
பார்த்து அவ்வளவு வருத்தப்பட்டதில்லை. மற்ற பாஷைகளை பிடித்த பீடை தமிழையும்
‘தொத்த’ ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது.’
 
     செய்யுள் இலக்கண விதிகளையும், தளைகளையும் மீறி கட்டுப் பாடில்லாமல்
எழுதப்படும் கவியை பிரஞ்சு பாஷையில் Vers Libre என்று சொல்லுவார்கள். இந்தக்
கட்டுப்பாடில்லாத கவியினால் ஏற்படும் குணா குணங்களை நாம் ஆராய்ச்சி செய்ய
வேண்டிய ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது.
 
     கவிஞனுக்கு விலங்கிடலாமா என்று கேட்கலாம். கவிஞனுடைய கற்பனா சக்திக்கும்,
வெற்றிக்கும் ஓரளவு சுதந்திரம் அவசியந்தான். ஆனால், கவியானது சப்பாத்திக் கள்ளி
படர்ந்தது போல சட்டதிட்டங்களுக்கு உள்படாமல் திமிறிக் கொண்டு செல்லுமேயானால்
வியர்த்தமாகிவிடும் என்பது திண்ணம்.
 
     தமிழ்க் கவியின் இயல்பையும், சம்பிரதாயத்தையும், தாளலயத்தையும் தள்ளி
வைத்துவிட்டு வசனத்தையே கவிரூபமாக கடுதாசியில் எழுதிவிட்டால் கவியென்று ஒப்புக்
கொள்ள முடியுமா?
 
     உணர்ச்சி பாவத்திற்கேற்ற வார்த்தைகள், வார்த்தைச் சேர்க்கையினால் உண்டாகும்
புதிய சக்தி; உணர்ச்சியின் ஏற்றத் தாழ்வுகள், துடிப்புக்காகக் காட்டக்கூடிய தாளம், Rythm
இவைகள் உண்மைக் கவிக்கு இன்றியமையாத சாதகங்களில் சில. இவற்றில் சிரேஷ்டமானது
தாளம்தான். தாளம் என்ற கருவியை வைத்துக் கொண்டுதான் கவிஞன் கேட்போருடைய
ஹிருதயத்தைத் தட்டி எழுப்பப் ‘பாடாகப்படுத்திவிடுகிறான்.’
 
     இந்தப் “புதுரகக் கவிகளோ தாளத்தைக் கைவிட்டு விட்டார்கள். உரையும்
செய்யுளுமில்லாத வௌவால் கவிதைக்கு தமிழில் ஒரு