பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 180

  இன்னுயிரைப் பறித்துக் கொள்
என்னை அண்டாமல்
எட்டி நீ நின்றாலும்
இளித்தாலும்
கறுத்தாலும்
என் மணத்தால் தொத்துவேன்
ஏற்காமல் முடியாது
மயக்க நெறி வேண்டாம்
மனிதனே என்று சொல்லும்
 
     முரட்டிருட்டில் முள்ளுவழி செல்லும் போது, தங்கத் தமுக்காயிரம், தடதடக்க ஏறி
வரும், பழம்பரிதி தானாக
 
  ஒளி இந்தா
விலை இல்லை
வாடகை இல்லை,
திகைப்படைய வேண்டாம்,
வழி இதுதான்.
 
என்று கை கொடுக்கும்.

     இவற்றிலிருந்து ‘வாழ்நெறித் திறவுகோலை வாங்கிக்கொள்’ என்று இயற்கை கற்றுத்
தருவதாக ‘திறவுகோல்’ எனும் கவிதை கூறுகிறது.

     இத்தகைய கருத்தை ‘ரவி கூறும் மர்மம் புவி கூறும் கர்மம்’ பற்றி வேறு
கவிதைகளிலும் பிச்சமூர்த்தி விளக்கியிருக்கிறார்.

     ‘உலகைத் திருத்தும் உத்தமச் செய்கை’ மனிதருக்கு வேண்டாம் என்று அவர்
அறிவிக்கிறார்.
 
  உன்னைத் திருத்த
உலகில் வந்தவர்கள்
பிறர் சுமையைத் தூக்க
வக்காலத்து வாங்கியவர்கள்
பொதுச் சேவை என்று
பலசரக்கு கொணர்ந்தவர்கள்
வந்த வழி சென்று விட்டார்கள்.
சுமையும் ஏடுகளும்
ராம பாண பூச்சியும்
காதுடன் உறவாடும் உபதேசப் பந்தலும்
காசுக்குத் தூண்டி விடும்
கலாசாரக் கைகளும் தான் மிச்சம்.
 
     ‘கோபுரச் செருக்கொலிக்க, வாழ்வுக்கு வழி காட்டும், வரையோட்டுச் சாத்திரம்
சொல்ல நான் வரவில்லை, சுயநலத்தைப் பொதுத் தொண்டாக்கும், ஜாலக் கண்ணாடி
வித்தைகாட்ட நான் பாடவில்லை’.
 
  பழவேதப் படையை ஓட்டி
லோகாயத வேதப் படையின்