பக்கம் எண் :

181  வல்லிக்கண்ணன்

  தமுக்காய் ஒலிக்க நான்
தரணியில் அதிரவில்லை
மனுக்கால வெள்ளம் போச்சு,
மார்க்ஸ் கால வெள்ளம் போகும்
பூமித்தாய் கருணை வெள்ளம்
எக்காலும் வடியாதோடும்
இயற்கையின் ஓயாத் தானம்
உயிர்களின் ஒழியா உழைப்பு
செயற்கையின் சிலும்பலிடையே
மலையாக நிலைத்து நிற்கும்.
 
என்று தெரிவிக்கிறார கவிஞர் ‘காட்டு வாத்து’கவிதையில்.

     சென்றுதுக்கு ஏக்கம் வளர்த்து, வருவதற்கு வாழ்த்து கூவி, முன்னேற்றம் காணும்
விஞ்ஞான விந்தை என்று தடுமாறி, அநாவசியமான அலுவல்களில் ஈடுபடுவதினால்
இன்றைய வாழ்வுக்குப் பயன் எதுவும ஏற்படாது என்று விளக்குகிறது அந்த நீண்ட கவிதை,

     தன்னறிவுக்கும் மேலாக, தனி அறிவுக்கு அப்பாலும் தரணியையும் தராதலங்கள்
அனைத்தினையும் உடலாக்கிப் புகுந்து, விஞ்ஞானிகளும் வியக்கும் படியாக விளையாடும்
சக்தியை, உதிரத்தில் ஒன்றியதாய், உள்ளுக்குள் இருந்து கணத்திற்குக் கணம் வழி காட்டும்
உணர்வாய் உணர்ந்து விட்டால்.
 
  முன்னும் இல்லை
பின்னும் இல்லை
தொடர் சங்கிலி
முழுதும் இன்பம்
முற்றிலும் உணர்வு
 
வேடன்தாங்கலில் வந்து சேரும் பறவைகளை இதற்கு ஆதாரம் காட்டுகிறார் கவி.
 
  தன்னினத்தைப் பேணும் உணர்வில்,
நெறியோ நீதியோ,
நீண்ட கதைகளோ
கலாசார மரபோ, மமதையோ
புகட்டாத மெய்யுணர்வால்
மூவாயிரம் கல்தாண்டி
 
     பறவைகள் வேடன்தாங்கல் தேடிவருகின்றன. அங்குள்ள நீர்ப்பரப்பு நடுவில்
கவிந்தமரங்களில் தங்குகின்றன.
 
  பறந்துவரப் பாதை உண்டா
பார்த்து தெளிவு பெற
படங்களுண்டா?
தவறைத் திருத்தப்
பகுத்தறிவுண்டா?