பக்கம் எண் :

183  வல்லிக்கண்ணன்

வைத்திருக்கிறார். உடலில் நோவு கண்டால் அதை மாற்றும் மருத்துவர்களும் மர்மமாய்
உள்ளேயே இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கண்ணில் மண் விழுந்தால் கை வைத்துக்
கசக்கக் கூடாது. விளக்கெண்ணெய், முலைப்பால் போன்றவற்றை ஊற்றவேண்டும்
என்பதுமில்லை. 
 
  கண்ணீர் இருக்கு
தூக்கச் சிகிச்சை தரும்
காலமும் இருக்கு
 
இவ்வாறு ‘இயற்கை வைத்தியம்’ பற்றிய தன் கருத்தை பிச்சமூர்த்தி ‘மணல்’ கவிதையில்
வெளிப்படுத்துகிறார். அதற்கு மேலாக வளரும் முத்துச் சிப்பி சிந்தனை அழகாக
இருக்கிறது.
 
  கைவைப் பேனென்றால்
முத்துச் சிப்பி நீ
ஆகி விடு
உடலில் புகுந்த மாசைத்
தொடைக்கும் தொல்லைக்கும்
முத்துச் சிப்பிக்கும்
வெகு தொலை தூரம்
தன்னுயிரின் ரஸத்தை
தன்னையே அறியாது
தானாக மாசின் மேல் பூசி,
மாசை உருவாக்கிப்
பின்னர் மணியாக்கி,
ஏழு வண்ணச் சால்வையும்
இடை இடையே தைத்து
நல்முத்தாக்கி
ஆனந்தம் கொண்டால்
முத்துச் சிப்பி ஏலம் வரும்
முழு மூச்சுப் போட்டி வரும்
மாசு மணி ஆச்சு
மணலை நீ மணி செய்வாயா?
 
பழமை -புதுமை என்று பேசிக் கொண்டிருப்பது வீண் வேலை. எப்போதும், எந்த
நிலையிலும் உழைத்துத்தான் உயிர்வாழ வேண்டியிருக்கிறது. ஆகவே உழைப்பைப்
போற்றுவோம் என்பது பிச்சமூர்த்தியின் எண்ணம். இதை ‘புதுமைக்குப் பயணம்’ என்ற
கவிதை தெளிவுபடுத்துகிறது.

     கூனிக் குறுக்கும் குச்சும் கூழும் உழைப்பும் கொள்ளாமல் இன்பமான புதுமை வாழ்வு
வாழ மேற்கு வழிகாட்டும் என்று புகழ்கிறார்கள். மேற்கே உள்ள வாழ்க்கையை ஆராயப்
போனால், அங்கும்
 
  ஆலைச் சங்கின்
ஆகாய ஓலம்