| டிராக்டரை ஓட்டும் தோழர், பஞ்சாலைக் கபந்தன் வாயில் புகுந்திடும் மக்கள் சாரி, மகளிர் சாரி |
மேற்கிலும் கிழக்கு மாதிரித் தான். உழைப்புத்தான் மிகுந்திருக்கிறது. அப்புறம் என்ன ! |
| தள்ளு- பழமை என்ன புதுமை என்ன? காலைக் கும்பிடு கைகளை வாழ்த்து |
என்கிறார் கவிஞர். இயற்கையில் கொடுமைகளும் காணப்படுகின்றன. எனினும் அக்கொடுமையிலும் கருணை உண்டு. நன்மை கலந்திருக்கும் என்று பிச்சமூர்த்தி கருதுகிறார். ‘பேட்டி’ கவிதை இதைக் கூறுகிறது. ஆறுகுட்டிகள் போட்ட நாய், இரண்டு குட்டிகளைத் தின்று விடுகிறது. தாய் தின்ற கொடுமையிலும் கருணையைக் காண்கிறார் கவி. |
| இரண்டு குட்டிப் பால் மிச்சம் பாக்கிக் காச்சு. கொடுமையிலும் கருணை உண்டு அகலமாய், அறுதல் நாராய் ஆறு இருந்தென்ன ? இல்லாதென்ன ? நகல் குறைந்தால் அஸவ் வலுக்கும் மலர் கழிந்தால் கிளை வலுக்கும் |
என்கிறார். ‘செங்கால் நெடுக்கு வெண் பட்டுடம்புக் குறுக்கு’ முடியில் நீரை நோக்கும், மஞ்சள் கட்டாரி மூக்கு, கொண்ட கொக்கு கூட ‘வாழ்வும் குளம். செயலும் கரை, நாமும் கொக்கு’ என்ற உண்மையை உணர்த்தி ஒரு தெளிவு பெற உதவுகிறது. அதை ‘கொக்கு’ என்ற கவிதையில் காணலாம். ‘கேட்பதல்ல காதல், தருவதுதான்’- எண்ணி ஏங்கி எதிர்பார்த்து அன்பைக் கோரும் வேளையில் அன்பன் வரமாட்டான்; எதிர்பாராத, தயாராக இராத தருணத்தில் அவன் வந்து அருள் புரிவான் என்கிற உயர்ந்த காதல் தத்துவத்தை ஆத்மீகமாக விரித்துப் பொருள் உரைக்க இடம் அளிக்கும் விஷயத்தை-பிச்சமூர்த்தியும் கவிதைப் பொருளாகக் கொண்டு சில கவிதைகளைப் படைத்திருக்கிறார். காதல், ராதை என்று இரண்டு இனிய கவிதைகளும் இத்தரத்தவை. ‘சிணுக்கம்’ என்பைதக்கூட இதில் சேர்த்து விடலாம். அவனும் அவளும் தனித்தனி என்கிற பேதமற்று இருவரும் தன்மயமாய் |