பக்கம் எண் :

185  வல்லிக்கண்ணன்

ஆகிவிடும் அன்பு நிலையை- ‘வீட்டில் இருந்தும், என்னுடன் வருகின்றாய். வெளியே
சென்றாலும், உன்னுடன் இருக்கின்றேன்’ என இருவரும் ‘உயிரும் உடலுமாய்’ மாறி நிற்கும்
தன்மையை உணர்த்துகிறது இக் கவிதை.

     இதில் வருகின்ற ஒரு உவமை
 
  ரயிலுக்கு ஜட்காவில்
ஏறுமுன் உறவினர்
வண்டிப் படியில்,
மதகு நீர் சுழலைப் போல்
தயங்கி விடை கொள்ளுவர்
 
என்பது அருமையாக இருக்கிறது.

     இக்கால கட்டத்தில், வாழ்வின் வெறுமையை, தொல்லையை, ஏமாற்று வேலைகளை,
போலிகளைக் குறித்தெல்லாம் பிச்சமூர்த்தி கவிதைகள் இயற்றியிருக்கிறார்.
 
  வாழ்வின் அடிப்படையைக்
குடைந்தெறிய முற்பட்டேன்,
தருக்கமும்
முடிவில்லா முட்புதரும்
சப்பாத்திப் பழம் சடைத்த
வெறுமையே வாழ்வாயிற்று.
                                        (சுமைதாங்கி)
 
     போலி, ஸ்விச், முரண் போன்றவை இத்தகையன. வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சில
அனுபவங்களை, காட்சிகளை, நயமான கவிதைச் சித்திரங்கள் ஆக்கியிருக்கிறார் அவர்.
கண்டவை, கலை, கைவல்ய வீதி, நடப்பு, பால்கடல் முதலியன இந்த விதமான படைப்புகள்.
படித்துச் சுவைக்கப்பட வேண்டிய நயமான கவிதைகள் ஆகும்.

     கசப்பான உண்மைகளை பரிகாசத் தொனியோடு - ‘ஸட்டயர்’ ரீதியில் -
கவிதையாக்கி இருப்பது பிச்சமூர்த்தியின் பிற்காலக் கவிதைகளில் காணப்படுகிற புதிய
தன்மை.
 
  சொல்லொரு சூது,
இருபுறம் ஓடும்
காக்கை கண்,
இருமுகம் தெரியும்
பேதக் கண்ணாடி
காம்பில் படாமல்
மரத்தில் தாக்கி
மூர்க்கமாய் திரும்பி வரும்
எறிகல்.
உண்மை என்று
ஒருதலை கடிப்பதை
மாயை என்று மறுக்கும்
இருதலைப் பாம்பு.