| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 192 |
காலத்தில் தமிழகத்து இலக்கியவளர்ச்சி நெறிகளில் தில்லியின் தாக்கத்தினை நாம் காண்கிறோம். கணையாழி தமிழகத்துக்குப் புறம்பான நகர நாகரிக வாசனையை ஏற்படுத்துகின்றது. தமிழகத்துப் புதுக்கவிதைப் பயில்வாளர்களைத் தனி மனிதர்களாக எடுத்து அவர்களது சமூக, பொருளாதாரப் பின்னணிகளை ஆராய்வது உருசிகரமான ஒரு முயற்சியாக அமையுமென்றே நம்புகிறேன். இத்தகைய சூழ்நிலையில், இயந்திர நாகரிகத்தின், நகர நாகரிகத்தின் ஆதிக்கத்துக்குட் பட்டவர்கள் புதுக் கவிதைப் பயிற்சியில் இறங்குவது தவிர்க்க முடியாப் பண்பே. நகர நாகரிகம் இன்று ‘எலீற்றிசிம்’ எனும் மேன்மக்கள் வாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுக் கவிதைப் பயில்வு எலீற்றிசத் தொழிற்பாட்டே எனலாம். எலீற்றிசத்தைப் பின்பற்ற முனைவது இன்றைய பண்பாட்டமிசங்களில் ஒன்று. மேற்குறிப்பிட்ட சமூக, பொருளாதாரப் பின்னணியில் வராதவர்கள் புதுக் கவிதையைப் பயிலும் பொழுது அது மேனிலைத் தழுவல் என்றே கூறல் வேண்டும். இது ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் செவிப்புல நுகர்வின் நிலை பற்றியும் நாம் சிறிது நோக்குதல் வேண்டும். கிராமியக் கலைகளின் வளர்ச்சி, கிராமியப் பாடல்களின் பயில்வு, பாரம்பரிய நிலையின் ஸ்திரப்பாட்டினை எடுத்துக் காட்டுகின்றது. கட்புலச் சாதனமாகிய சினிமாவின் செவிப்புல அமிசமாகிய வசனமும் பாடலும் தமிழக சினிமாவில் பெறும் முக்கியத்துவத்தினையும் இங்கு நோக்கல் அவசியம். கவிதையைப் பொறுத்தமட்டில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் ஆகியோரின் திறமை காரணமாகச் செவிப்புல நுகர்வுக்கே பயன்படும் திரைப்படப் பாடல்கள் இன்று கவிதைகளாகியுள்ளதையும் சனரஞ்சகக் கவிதைகளாக விளங்குவதையும் நாம் காண்கிறோம். கிராமியப் பாடல்களின் மறுமலர்ச்சியும் சினிமாப் பாடலின் முக்கியத்துவமும், புதுக் கவிதை வளர்ச்சிக்கான சூழ்நிலையை அடி நிலை மக்கள் நிலையில் அகற்றி விடுகின்றது. இவ்வேளையில் புதுக்கவிதையாளர்களின் கருத்துக்களையும் மனோபாவங்களையும் ஆராயும் பொழுது இப்பயில்வாளர் நகர நாகரிகத்தின் சாயல்களைப் பிரதிபலிப்பதையும் நாம் காணலாம். இக்கட்டத்தில், முற்போக்கு இலக்கிய கடப்பாடுடைய ‘தாமரை’ புதுக்கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்பட வேண்டிய தொன்றாகும். தமிழ் நாட்டின் கிராமியக் கலை ஆய்வுக்கு நவீன இலக்கியத்தில் தளம் அமைத்துக் கொடுத்த தாமரை இன்று புதுக்கவிதைப் பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா, அன்றேல் அடிநிலை மக்களை ஆற்றுப் படுத்தலா என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவில்லை.” (கா. சிவத்தம்பி) மார்க்ஸீயப் பார்வையும், ‘சமூக விஞ்ஞானக் கண்ணோட்ட’மும் பெற்றிராத இதர இலக்கியவாதிகளுக்கு எதிராக, ‘எல்லா மக்களும் ஒரு புதிய வாழ்வைப் பெறுவதற்கு உதவியாக, போர்க்குணத்துடனும், புரட்சித்தன்மையுடனும் இலக்கியம் செய்யவேண்டும் என்ற லட்சியம் | | |
|
|