பக்கம் எண் :

195  வல்லிக்கண்ணன்

   மற்றொன்று, கைசின் குலியேவ் எழுதிய ‘நிர்ப்பயமான ஒரு குளியல்’, கல்யாண்ஜி
தமிழில்.
 
இன்னும் வானில் சூரியன் ஒளிர
இங்கோர் பெண் ஓடையில் குளிக்கிறாள்.
ஆரத்தழுவும் கரங்கள் போல
அங்கம் தழுவும் தங்க ரேகைகள்
நீரின் மேலே ‘வில்லோ’ வளைய
நிழலோ அவளின் கூந்தல் வருடும்
புல்லும் மயங்கித் தூங்கப் போகும்
புதர்கள் கரையில் மௌனம் காக்கும்.
இங்கோர் பெண் ஓடையில் குளிக்கிறாள்..
இங்கும் எங்கும் இல்லை மரணம்,
போயின கேடு வாதை, நோவு
போயின யுத்தம், ரத்தம் எல்லாம்;
அமைதி வாழ்க்கை, அழகு மீண்டும்
ஆட்சி புரியும் காட்சி விரிய
இங்கோர் பெண் ஓடையில் குளிக்கிறாள்.