| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 196 |
எழுபதுகளில் | மார்க்சீய தத்துவத்தின் உந்துதலோடு கவிதை எழுத முற்பட்டவர்கள்- ‘தாமரை’யிலும இதர முற்போக்கு இதழ்களிலும் புதுக்கவிதை எழுதிய முற்போக்கு எழுத்தாளர்கள் அல்லது அவர்களைச் சார்ந்த சிலர், தங்களை ‘இரண்டாவது அணி’ என்று குறிப்பிட்டுக் கொண்ட போதிலும், அவர்களுக்கு எதிரான ‘முதலாவது அணி’ என்று சொல்லப்பட வேண்டிய இயக்கமோ, திரளோ சக்தியோ எதுவுமே ஏற்பட்டிருந்ததில்லை. இலக்கிய ஈடுபாடுடையவர்கள் - இலக்கியத்தின் பலவிதப் போக்குகளிலும் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்தவர்களும் பெறமுயன்றவர்களும் - தனி நபர்களாக தங்கள் இஷ்டம் போல் எழுதிக்கொண்டிருந்தார்கள். எதைப் பற்றி வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதுவதை அழகாகவும் கலையாகவும் ஆற்றலோடும் எழுதவேண்டும் என்ற இலக்கிய நோக்குடையவர்கள் எல்லா விஷயங்களைப் பற்றியும் தங்களது மன எழுச்சிகளைக் கவிதையாக்குவதில் உற்சாகம் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே வெற்றி பெற்றார்களா என்பது வேறு விஷயம். புதுக்கவிதை எழுதித் தேர்ச்சி பெற்றவர்களின் படைப்புகளையும், ஆர்வத்தோடு எழுத முற்பட்டவர்களின் எழுத்துக்களையும் ‘எழுத்து’ பத்திரிகை வெளியிட்டு, புதுக்கவிதை வளர்ச்சிக்குத் துணை புரிந்தது, ‘எழுத்து’வுக்குப் பிறகு, புதுக்கவிதைக்கு ஆதரவு காட்டுவதில் ‘கணையாழி’ மாத இதழ் முன்னின்றது. ‘எழுத்து’ நடந்துகொண்டிருந்த காலத்திலேயே ‘கணையாழி’ தோன்றிவிட்டது. புதுக்கவிதைக்கு வரவேற்பு அளித்து வந்தது. பின்னர், புதுக்கவிதை எழுதியவர்கள் ‘கணையாழி’யின் ஆதரவை உற்சாகத்தோடு ஏற்று தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். ‘எழுத்து’ வோடு ஒத்துழைத்து, பலவருஷங்களுக்குப் பிறகு, ‘நடை’ என்ற புது முயற்சியில் ஈடுபட்ட இலக்கிய உற்சாகிகள் சிலரும் அவர்களுடைய நண்பர்களும், 1970ல் ‘கசடதபற’வை ஆரம்பித்து, புது வேகத்தோடு இலக்கியப் பணி புரிய முன்வந்தார்கள். புதுக் கவிதை வளர்ச்சிக்கும் சோதனைக்கும் ‘கசடதபற’ பேராதரவு தந்தது. 1970லும் அதற்குப் பிறகும் இலக்கிய உணர்ச்சி பல வகைகளில் செயல் மலர்ச்சி பெற்றதாகத் தோன்றியது. புதிய புதிய இலக்கியப் பத்திரிகைகளும், இலவச வெளியீடுகளும் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் தலை தூக்கின. கவிதைத் தொகுப்புகளும் வெளிவரலாயின. ஸீசனல்பாதிப்பு மாதிரி- அல்லது அந்தச் சமயத்துக்கு எடுப்பாக தோன்றி வேகமாகப் பரவும் ஃபாஷன | | |
|
|