பக்கம் எண் :

203  வல்லிக்கண்ணன்

எல்லாம் எழுதியிருப்பது சரிதானா? புதுக்கவிதையின் இந்தப் போக்கு நல்லதுதானா?-
இவ்வாறெல்லாம் விவாதித்து ஒரு முடிவுக்கு வருவது - படிக்கிறவர்களின் விருப்பு
வெறுப்புகள் இலக்கியநோக்கு முதலியவற்றைப் பொறுத்த விஷயம்.

     என்னைப் பொறுத்த மட்டில், இலக்கியத்தில் அனைத்துக்கும் இடம் உண்டு. எதையும்
-எல்லாவற்றையும் எழுத்தில் சித்திரிக்க வேண்டியது தான் என்ற நோக்கு உடையவனே
நானும் என்று தெரிவித்து விடுகிறேன்.

     ‘கசடதபற’ மூலம் பாலகுமாரன் கவனிப்புக்கு உரிய ஒரு கவிஞராக வளர்ச்சி
பெற்றுள்ளார். ஜப்பானியக் கவிதை பாணியில் இவர் 4வரி, 3 வரிக் கவிதைகள் பல
எழுதியிருக்கிறார்.
 
  முட்டி முட்டிப்
பால் குடிக்கின்றன
நீலக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்’
‘மழைக்கு பயந்து
அறைக்குள் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்’
விடலைகள்
துள்ளித் துவண்டு
தென்றல் கலக்க
விஸில் அடித்தன
மூங்கில் மரங்கள்
 
போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

     இவருடைய ‘வெப்பம்’ ரசனைக்கு உரிய நல்ல கவிதை.
 
  நீரோடு கோலம் காணா
நிலைப்படியும்
நெளிந்தாடு சேலையில்லாத்
துணிக் கொடியும்
மலரவிட்டு தரை உதிர்க்கும்
பூச் செடியும்
வாளியும்
கிணற்றடியும்
துவைக்கும் கல்லும்
வரளுகின்றன என்னைப் போல்
அவளில்லா வெறுமையில்.
 
பாலகுமாரன், வளர வளர, ஓட்டமும் தொனி விசேஷமும் கொண்ட கவிதைகள்
படைப்பதில் தேர்ச்சி பெற்றுள்ளார். ‘முளைமரங்கள்’ ‘தென்னை’ ஆகிய இரண்டும்
முக்கியமானவை.
 
  ‘தென்னை உச்சியில் பச்சை மட்டை
ராட்க்ஷஸ மூக்காய் விடைத்துக்கிடக்கும்