பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 206

  மணலில்
வாழ்ந்தாலும்
நாம்
எவற்றையும்
விளைப்பதில்லை.
முத்துக்கள்,
மீன்களின்
கடலில்
நாம் இறங்குவதில்லை
மழைக்கு
மறைவிடம்
தேடுகிறோம்.
 
     ‘எழுத்து’ காலத்தில் கவிதை எழுத ஆரம்பித்த எஸ். வைதீஸ்வரன் ‘கசடதபற’ விலும்
எழுதினார். வலை பின்னும் சிலந்தி வாழ்வு. ‘நினைத்த இடத்தில், கவலையற்று, நின்ற
நிலையில் பெய்து விட்டு’, மறையும் வால்கள் ஆன மேகங்கள்,
 
  பகல் பன்னிரண்டின்
வெம்மையினால்,
வெட்கந் துறந்த
கன்னிமாந் தோப்பு
தன்னடியில் நிழல் சேலை
அவிழ்த்து விட்டு
செங்கனிகள் தெரியக்காட்டி,
காற்றுக்கு நிற்கும்
சோக - நிருவாணக் காட்சி’
                                              (குளிர்ச்சி)
 
     கொடி மேலேறி ஈர ‘மனைவி ஜாக்கட்டில்’ தாவிக் குஷியாய் படபடக்கும் காக்கை
எழுப்பும் பொறாமை போன்ற விஷயங்களைக் கவிதைப் பொருள் ஆக்கியுள்ளார். பொய்
விழி, பட்டம், நிலை என்ற கவிதைகள் நயமாக உள்ளன.

     கா.நா. சுப்ரமண்யம், நகுலன், தருமு அரூப் சிவராம், சச்சிதானந்தம், வே. மாலி
கவிதைகளையும் ‘கசடதபற’ பிரசுரித்துள்ளது. கோ. ராஜாராம், கங்கை கொண்டான்
கவிதைகள் சிலவும் வெளிவந்துள்ளன.

     ராஜாராமின் சகுனம் பிளேக், சிந்தனையைத் தூண்டும் கவிதைகள்.
 
  எதற்குக் கொடும் பாவி?
எரிகின்ற உடலுக்கோ
இளகாத மனதுக்கோ?
 
என்று கேட்கும் ‘கொடும்பாவி’யும் ஓடிக் கோப்பைகளை ஜெயித்தவனை கிறுகிறுக்கப்
பண்ணி கீழே ‘விழ வைத்துக் கோப்பைகள் ஜெயிப்பதைக் கூறும் ‘வெற்றி’யும் கங்கை
கொண்டானின்