பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 208

மேலோட்டமான பார்வை


     ‘எழுதவேண்டும் ஒரு புதுக்கவிதை’ என்றொரு கவிதை - பாலா எழுதியது - ‘தீபம்’
இதழ் ஒன்றில் பிரசுரமாகியுள்ளது. ‘ஒரு புதுக் கவிதை எழுத வேண்டும் என்று
ஆசைப்படுகிறவர் ‘என்ன செய்யலாம்? என்று யோசிக்கும் முறையில் அது
எழுதப்பட்டுள்ளது.

     ‘செக்ஸ் ஜோக்குகள் சேகரிக்கலாமா? எலியட்டிற்கும் யேட்சிற்கும் பவுண்டிற்கும்
அப்டைக்கும் தமிழ் வாழ்வு தரலாமா? அம்மாவிடம் பாட்டியிடம் விடுகதைகள்
வேண்டலாமா? மலையாளக் கவிஞரிடம், வடமொழிப் புலவரிடம் வார்த்தை வரம்
வாங்கலாமா?
 
  பாரசிக ரோஜாவை
பாடும் புல் புல்லை
கிப்ரான் காலி ஃபை
ஒட்டகத்தின் கூன் முதுகில்
உட்கார்த்திக் கொண்டு வந்து
எங்களுடெ மண்ணில்
இறக்குமதி செய்யலாமா?
 
     பண்டிதப் புலிகளைச் சீண்டிட, வசைப்பதங்கள் இசைக்கலாமா? இலக்கிய இதழ்களில
வரும் வார்த்தைகளைத் தோண்டி, வாக்கியங்கள் கோக்கலாமா?
 
  பூமியைப் புரட்டி
அது செய்வோம்
இது செய்வோம்
என
சுய தம்பட்ட
ஜோஸ்யம்
சொல்லலாமா?
 
     என்ன செய்யலாம் -ஒரு புதுக்கவிதை எழுத வேண்டும் என்று பரிகாசத் தொனியில்
அது அமைந்துள்ளது. அது வெறும் பரிகாசம் மட்டுமல்ல. உண்மை நிலையை உள்ளபடி
சித்திரிக்கிறது என்றே சொல்லலாம்.

     புதுக் கவிதைக்குக் கிடைத்த வரவேற்பையும் ‘புதுக்கவிதை’ என்று எழுதப்பட்ட
எதையும் பிரசுரிக்கத் தயாராக இருந்த பத்திரிக்கைகளின் போக்கையும் கண்டவர்கள்,
எதையாவது எழுதி எப்படியாவது அச்சில் தங்கள் பெயரையும் பார்த்து விடவேண்டும்
என்ற ஆசையும் அரிப்பும் கொண்டவர்கள், மூன்று வரிகளும் நான்கு வரிகளும், ஒருசில
வரிகளும், எழுதி சுலபத்தில் பெயரும் கவனிப்பும் பெற்றுவிட முனைந்தார்கள். சிரமமும்,
சிரத்தையும் பயிற்சியும் பாடுபடலும் இல்லாமலே ‘எழுத்தாளர்’ என்ற கீர்த்தியை
அடைந்துவிட