விரும்பியவர்களுக்கும் ‘புதுக் கவிதை’ எழுதுவது லட்சிய சித்திக்கு வகைசெய்யும் சுலப மார்க்கமாகத் தோன்றியது இந்தக் காலத்தில். ஆகவே, செக்ஸ் விஷயங்களையும், ஜோக்குகளையும், விடுகதைகளையும், வார்த்தை அலங்காரங்களையும், தமிழ்ச் சொற்களோடு பிற மொழிச் சொற்களைத் தாராளமாகக் கலந்து எழுதுவதையும் கவிதை என்று தரப் பலரும் தயங்கவில்லை. கவிதைகளில் ஆங்கிலச் சொற்களை அதிகம் விரவி வைப்பதும், கவிதைகளுக்கு Dejection, The split, Oh! that first love, The Great Expectations என்பது போல் ஆங்கிலத் தலைப்புகள் கொடுப்பதும் சகஜமாயிற்று. |
| பூமியெனும் காதலி மழையெனும் showerல் குளிப்பது கண்டு வானமெனும் ‘காதலன் மின்னலே flash light ஆக ‘க்ளிக்’ என்றே ஒரு snap எடுத்தான். |
‘மின்னல்’ என்ற இக்கவிதை ஒரு உதாரணம் ஆகும். ‘விடுகதை’யாகக் கூறப்பட வேண்டியவற்றை வக்கிர விரிவுரை, சாமார்த்தியமான விளக்கங்கள். குறும்புத்தனமான - குதர்க்கமான - பொருள் கூறல்களை எல்லாம் கருத்து நயம் கொண்ட கவிதைகள் என்று அநேகர் எழுதினார்கள். |
தாஜ்மகால் |
| ஷாஜஹானின் சலவைக்கல் கண்ணீர் |
காந்தி |
| இந்நாளில் இந்தியர்க்குச் சிக்கியதோர் சீதக்காதி |
சரித்திர நாவலாசிரியர்கள் |
| பாலைவனத்துக் கானல் நீரில் படகினை ஓட்டும் பரம பிதாக்கள் |
புழுதி |
| வேகமாய் மிக ஆர்வமாய் பஸ்ஸைப் புணர்ந்த மண்ணின் பிரசவம் |