| 					  | 										ட்ராக்டர் 					வெட்கம் சிறிதுமின்றி 					ஊரறிய உலகறிய 					மண் என்னும் மங்கையைக்  					கற்பழிக்கும் கயவன்   | 					
														இப்படிப் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம்.  					      சாதாரண நடப்புக்களையும், சந்தேகங்களையும், சில பிரச்சினைகளையும், 					உரைநடையாக நேரடியாக எழுதாது, வார்த்தைக்குக் கீழ் வார்த்தையாக அடுக்கி 					ஒரே  					வாக்கியத்தைப் ‘புதுக்கவிதை’யாகக் காட்ட முயல்கிற வேலைகளும் 					நடைபெற்றுள்ளன.   | 					
									| 					 யாக்கை  | 					
									| 					  | 										ஒரு 					சிறிய 					அலையின் 					ஒரு 					சின்னக்  					குமிழ் 					ஒரு  					பெரிய 					தத்துவம் 					சொல்லிச் 					சிதறியது!    | 					
									| 					 நல்லெண்ணம்  | 					
									| 					  | 										திருக்குறள்  					அழியக்கூடாது 					என்பதற்காகவே 					நாங்கள் 					இன்னும் 					திருந்தாமலிருக்கிறோம்.  					‘விவாகம்  					சொர்க்கத்தில் 					நிச்சயப்படுகிறது’ 					எனில் 					விவாகரத்தும் 					விதவைக் கோலமும் 					எங்கே 					நிச்சயிக்கப்படுகின்றனவாம்?   | 					
									| 					என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். |