வைத்தீஸ்வரனின் ‘குளம்’ என்ற - சற்று நீளமான - கவிதை படித்து ரசித்து அனுபவிக்கப்பட வேண்டிய நல்ல படைப்பு. | | இரவு பகலாய், இரவும் பகலும் மாறி மாறிக் குளிக்கும் நீருக்குள் தவறி விழும் விண்மீன்கள், ஜிவ்வென்ற சூரியன்கள், நீளும் கைகளை நிரந்தரமாய் ஏமாற்றி உள்மடங்கும் காலம், இருளைப்பிழிந்து ஊர்மேல் ஓளியுலர்த்தும் வேளை மீதி நிலவு, நோயாளிக் கோழையாய் நீரில் மெள்ளக் கரையக் கரைய ஊர் உறக்கம் கலையும் | போன்ற நயமான பகுதிகள் இதில் பல உள்ளன. சமூக வாழ்க்கையின் சிறுமைகளையும் சீரழிவுகளையும் கண்டு எரிச்சலும் கோபமும் கொண்டு கவிதைகள் படைக்கும் தி.சோ. வேணு கோபாலன் தன் பணியை தொடர்ந்து செய்துள்ளார். ‘முதுகு சொறிந்து கொள்ளும் பூண்நூல்கள்’ இளமைப் புதிரே(?) போன்றவை உதாரணங்கள் ஆகும். பாலியல் கவிதைகள் எழுதுவதிலும் அவர் ஆர்வம் காட்டியிருக்கிறார். பல்லிடுக்கிலும் பழநார், ‘யோக ஏக்கம்’ போன்ற கவிதைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. ‘எழுத்தாய்த மாத ஏடு’ அஃ தனது 8,9,10 இதழ்களைச் சேர்த்து ஒரே இதழாக்கி (பிரமில் பானுச்சந்திரன்) தர்மு அரூப் சீவராம் கவிதைகளை (38) தொகுத்து வெளியிட்டது. 1960 முதல் ’எழுத்து’ இதழ்களிலும், பிறகு நடை, ‘கசடதபற’களிலும் அவர் எழுதிய கவிதைகளும், அவர் ஆக்கிய வேறு பலவும், கண்ணாடியுள்ளிருந்து என்ற ‘குறுங்காவிய’மும், மூன்று ஆங்கிலக் கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. ‘கண்ணாடியுள்ளிருந்து’ என்ற இக்கவிதைத் தொகுப்புக்கு வெங்கட் சாமிநாதன். தர்மு அரூப் சீவராமின் தர்சன உலகம் என்றொரு முன்னுரை எழுதியிருக்கிறார். ‘பானுச்சந்திரனின் கவிதைகள் ‘இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில் தான் இயங்கும்’ என நம் தமிழ் தந்த மொழிவழிச் சாதனா சிறுவட்டச் சிறைக்குள் இருந்து கொண்டு நிர்ணயிப்பதோ, எதிர்பார்ப்பதோ தவறாக முடியும். பானுச்சந்திரனின் அனுபவ உணர்வுலகப் பெருவட்டம் மொழிச் சாதனா வட்டமாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயல்கிறது. அவர் கதைகளில் சிறுவட்டம் பெருவட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. ஆழம் பெருகுகிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அதன் பரிமாண எல்லைகள் | | |
|
|