பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 214

மாறியிருப்பதைக் காணலாம். காணச் சக்தியுள்ளவர்கள். ஏனெனில் முதலும் கடைசியுமாக
மொழி வெறும்குறீயீடே. பானுச்சந்திரனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப்
பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் தாமும் உணரும் சக்தி
வேண்டும். நமக்குப் பரிச்சயமான, பாதுகாப்புத்தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும்
உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சந்திரனின் உலகில் தகர்க்கப்படுகின்றன. கண்களின்
வீச்சு தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று அடிவானத்திற்கப்பால் அகன்று
விரியும் உலகத்தைப் பற்றிய ஞானம் இருந்தால் தான், அடிவானம் வரை மொழி வகுத்த
பாதை வழியே சென்று அதற்கு அப்பால் பானுச்சந்திரன் அமைக்கும் மொழிவழிப் பாதை
வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். -
இன்னொரு சிலரோடு பானுச்சந்திரனும் மொழிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின்
தரிசனங்களைக் காட்டுபவர்”.

     இவ்வாறு சாமிநாதன் அம்முன்னுரையில் அறிவிக்கிறார். ‘பானுச்சந்திரனின்
கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு. ஒன்று, அவரது படிம உலகம்,
இரண்டாவது, மன - பிரபஞ்ச உணர்வுலகம். படிமம், காட்சி வழிப்பட்டது, மன பிரபஞ்ச
ஆராய்வு வழிப்பட்டது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

     தர்மு அரூப் சீவராமின் படிமங்களும், மன உணர்வுகளும், கனவு - நனவு
அனுபவங்களும் அவரது கவிதைகளுக்கு ஒரு தனித்தன்மை கொடுத்துள்ளன. தனது கவி
நோக்கு குறித்து ‘தரிசனம்’ என்றொரு விளக்கவுரை எழுதியிருக்கிறார் அவர்,
இத்தொகுப்பின் பின்னுரையாக.

     இதர சில கவிகளின் நோக்கைப் பரிகசித்துப் பழிக்கும் இக்கவிஞரின் தரிசனங்கள்
எல்லாமே மகோன்னதமானவை. குறைவற்ற நிறைவுகள் என்று சொல்வதற்கில்லை;
அனைத்தும் பரிகாசத்துக்கும் பழிப்புரைக்கும் அப்பாற்றபட்டவையும் அல்ல.

     இவருடைய மனவெளியில் பெண்குறி ‘தலைகீழ்க்கருஞ்சுடர்’ ஆகக் காட்சி தருவதும்
கண்ணாடிக்குள்ளிருந்து தன்னை உணர முயலும் இவரது அகப் பிரபஞ்ச வெளியிலே,
ஆடும் சுடர்கள் ஒவ்வொன்றும் பெண்குறி விரிப்பு ஆக தரிசனம் தருவதும், பரிதியைக்
கண்டு,
 
  ‘இவ்வொளி யோனியை
தடவி விரித்தது எவர்கை?’
‘எவ்வகைப் பிரியம்?’
 
என்று இவரது ஆசைமனம் அதிசயிப்பதும்,
 
  ‘முகத்தில் முளைத்த
முலைகளாய் மயக்கும் என்
பிரதியின் கண்கள்’
 
என்பதும் கேலிக்கு இலக்காக முடியாத சித்திரிப்புகள் இல்லையே.