| ஈயாய்க் கண்கள் பலமொய்க்க என்னை உணர்ந்தேன் தெருமலமாய். |
பின்னல் பாட்டு, வளர்பிறை ஆகியவை படித்து ரசிக்கப்பட வேண்டிய பாலகுமாரன் படைப்புகள். மனித இயல்புகளையும் இயற்கைக் காட்சிகளையும் கவிதைகளாக இயற்றும் மாலன் படைப்புகளில் அநேகம் பாராட்டுதற்கு உரியவை. ‘ரூபங்கள்’ என்பது ஒன்று. |
| ஆனை வந்தது முதலில், அப்புறம் கலைந்து போனது; குதிரை மீதில் ஒருவன் கொஞ்ச நேரம் போனான் பாட்டன் புரண்டு மல்லாந்தான் பானை வெடிச்சு மரமாச்சு அலையாய்ச் சுருண்டது கொஞ்சம் மணலாய் இறைந்தது கொஞ்சம் கணத்தில் மாறிடும் மேகம் உண்மையில் எது உன் ரூபம்? |
புதிதாகக் கவிதை எழுத ஆரம்பித்தவர்களில் தேவகோட்டை வா. மூர்த்தியின் படைப்புக்கள் கவனத்தைக் கவரக்கூடியவை. ‘நிறக்குருடு’ சொல்லும் பொருளில் புதுமை கொண்டது. ‘பொற்கிளி’ ஊமைமனம்’ சொல்லும் முறையில் புதுமை பெற்றவை. ‘கணையாழி’யில் முஸ்தபா என்ற பெயரில் பிரசுரமான ‘வாழ்க்கைப் பருவங்கள்’ கருத்து பொதிந்த நல்ல கவிதை. ‘தலைமுடிகள், ஒன்றிரண்டு பத்து நூறாய்’ கருத்து உதிர்கிற இன்று ‘இலையுதிர்காலம்’ இதற்கு முன் மாரிக்கலாம். |
| எவரெவர் வாழ்விலோ பொன் மழை பெய்தது நான் பாலைவனத்தில் பொதி சுமக்கிறேன். |
என்று தொடர்ந்து முடிவிலாக் கோடையை எண்ணும் கவி நினைவுச் சுவடுகள் ஆகவும் விலகிய கனவுகள் ஆகவும் போய்விட்ட இனிய அனுபவங்களையும் புதிய சுவைகளையும் கூறுகிறார். இறுதியாக, |
| குளிர்பனிக் காலம் கடைசிப் பருவம் நரை திரை மண்டும் நோவுகள் மலியும் உயிர்ப் போராட்டம் வாழ்வில் இனிமேல் வசந்தம் இல்லை |
என்று முடிவு கட்டுகிறார். |