‘ஞானரதம்’ இதழ் ஒன்றில் அக்கினிபுத்திரன் எழுதியுள்ள ‘பொற்காலப் பொய்கள்’ சிந்தனை நிறைந்தது; சிந்திக்கத் தூண்டுவது. ‘சங்ககாலம் பொற்காலம்; சங்க இலக்கியம் சொல்கிறது’ என்று பெருமை பேசுகிறவர்கள் கூற்றில் உண்மை உண்டா? |
| மூப்பு! முக்கனி ! முக்கொடி! மூவாசை! முந்நாடு ! கொண்டு மூவேந்தரெல்லாம் இமயக் கூந்தலில் கொடிப் பூச்சூட்டி நீதிகள்துலங்க நியதிகள் நிலைக்கவும் ஆண்டனராம் ! அரசாண்டனராம்! |
அக்காலத்தில் நிலவியதாகச் சொல்லப்படும் பெருமைகள் பலவற்றையும் அடுக்கிச் செல்லும் கவிதை தொடர்ந்து சங்கப் பாடல்கள் காட்டும் கால நிலைமைகளைக் கூறுகிறது. |
| குறிஞ்சி முல்லை திணைப் பொருளாம் மலையும் காடும் அதன் இடமாம். கருப்பிருட்டும் பனிக்குளிரும் மேக‘பயங்களும் குகைகளில் ஓடுங்கலும் அவற்றின் சூழலாம்! இலை தழை உடுத்தும் ஆடைகளாம்! காட்டு விலங்கு வேட்டையும் நாட்டின் விலங்கு மேய்த்தலும் அவர் தொழிலாம். பகை மூண்டால் ஆ நிரை கவர்தல் போர் முறையாம்! இயற்கைப் புணர்ச்சி உரிப்பொருளாம் மலையில் காட்டில் எதுவும் எதுவுடனும் உறவுப் பாத்திகளின்றி உடலேறி உயிர் நடுதல் போல் யாரும் யாருடனும் ஊடலாகுமாம்! அதுவே இயற்கைப் புணர்ச்சியாகுமாம் சட்டத்தில் சிக்குண்ட கண்ணாடி சில் சில்லாய் உடைவதுபோல் உள்ளத்தில் பதிந்த படிமம் பொல பொலவென உதிர்கிறதே! காட்டு மிராண்டிகள் வாழ்ந்த காலம் தமிழர் வாழ்வில் பொற்காலம்! இதை சங்க இலக்கியம் சொல்கிறதாம்! |