பக்கம் எண் :

223  வல்லிக்கண்ணன்

இலக்கியப் பத்திரிக்கைகளில் கவிதைகள் எழுதிய அநேகர் வானம் பாடியிலும்
எழுதியிருக்கிறார்கள்.

     புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்னிப்புத்திரன், சக்திக்கனல்,
மு.மேத்தா, ரவீந்திரன், தமிழன்பன், ஞானி, மீரா, பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா,
கோ.ராஜாராம் என்று பெரிதாக வளரும் பட்டியலைக் கொண்டது. வானம்பாடி இயக்கம்.
இவர்களது படைப்புக்களில் சிற்பியின் கவிதைகள் கற்பனைவளம், கலைநயம், கவிதா
வேகம், உணர்வு ஓட்டம் கொண்டு சிறந்து விளங்குகின்றன. இவரது ‘சிகரங்கள்
பொடியாகும்’ கவிதை பற்றி நான் முன்பே (‘தாமரை’ பற்றி எழுதிய போது)
குறிப்பிட்டுள்ளேன். ராட்சதச் சிலந்தி, ஞானபுரத்தின் கண்கள் திறக்குமா?, சர்ப்பயாகம்,
நாய்க்குடை ஆகியவை வேகமும் விறுவிறுப்பும் கொண்ட சிந்தனைப் படையல்கள்.
‘முள்.. முள்.. முள்’ என்ற தலைப்பில் பல பொருள்கள் பற்றிய சிறு சிறு கவிதைகளைத்
தொகுத்திருக்கிறார் சிற்பி. ரசமான கவிதை இது.
 
 
பரு வெடித்த முகமாய்
பருத்த பலாப்பழத்தின்
தோலில் முள்
சுளையில்?
சுளையில் தான்,
சுளைக்குள்விதை
விதைக்குள் செடி
செடியில் தளிர்
இலை.. பூ காய்..
அப்புறம் பழம்
பழமெல்லாம் முள்
அதனால்
சுளையும் முள்
பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்து
சிலிர்த்துக் கொண்டது
‘முள்ளம்பன்றி...
‘ஓ’ இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று?
தேவகுமாரன் தலையில்
எப்போதோ சூட்டப்பட்டதற்கு
பழிதீர்த்துக் கொள்ள இப்போது
மனிதப் பிசாசுகள்
சிலரின் தலைக்குள்