பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். |
தியாகிகள் |
| வேலியைப் பாதுகாக்க மடிகின்ற பயிர்கள் |
பண்டிதன் |
| உன் வீடு தீ பிடித்து எரிகிறது என செய்தி வந்தால் அதிலுள்ள சந்திப் பிழையைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆசான். |
பொங்கல் |
| தீயவன் தழுவியதால் உள்ளம் கொதித்த பானை முக்காடு இட்டுக் கொள்கிறது. |
எச்சில் |
| ‘பணக்கை’யில் சோரம் போன வாழை இலைப் பெண் வெளி வந்த பின்னர் ‘பசிக்கை’ யில் உடல் விரிக்கிறாள் |
புது வாழ்வு அமைக்கும் எண்ணத்தோடும், சமுதாயப் பார்வையோடும் கவிதை படைப்பதுடன் நின்று விடாது. வேறு பல நோக்குகளிலும் கவிதைகள் சிருஷ்டிப்பது குற்ற மல்ல என உணர்ந்தவர்கள் போல், இதர ரகங்களிலும் சிலர் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். கங்கை கொண்டான், தமிழ் நாடன் போன்றவர்களது படைப்புக்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். தமிழ் நாடன் ‘நட்சத்திரப் பூக்கள்’ என்று எழுதியுள்ள துண்டுக் கவிதைகள் ரசம் நிறைந்தவை. |
| வாயெல்லாம் மின் பல்லாய் வானம் பதினாலு நாள் இளித்தால் பிறைத்துண்டு வெல்லக் கட்டியொன்று பிச்சை விழும், சின்ன நட்சத்திரமே சின்ன நட்சத்திரமே ! |