‘வெளிச்சங்கள்’ என்ற பெயரில் ‘வைகறை’ வெளியீடு ஆகப் புத்தக உருவம் பெற்றுள்ளன. |
| வைகறைப் போதுக்கு வார்த்தைத் தவமிருக்கும் வானம்பாடிகளே - ஓ வானம்பாடிகளே! இந்த பூமி உருண்டையைப் புரட்டி விடக் கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப்போகிறீர்கள்? ஓ! என் தோழரே ஒப்பற்ற அந்த மனிதாபிமானக் கவிதையை நம்மில் யார் பாடப்போகிறோம்? |
இப்படி ஒரு கவிதையில் கேட்டிருக்கிறார் மேத்தா. மனிதாபிமானமும் சமுதாயப் பார்வையும், தன்னம்பிக்கை ஆற்றலும் எதிர்காலக் கனவுகளும் கொண்டு கவிதை வானத்தில் உற்சாகமாகப் பறக்கத் தொடங்கிய வானம்பாடிகள் சாதித்திருப்பது சிறிதேயாகும். அவர்கள் செய்ய வேண்டியிருப்பது இன்னும் மிகுதி. |