| புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 230 |
சின்னத் தொகுப்புகள் | ‘கசடதபற’ நண்பர்கள் 1972 டிசம்பரில், அவர்களது ‘இலக்கியச் சங்கம்’ வெளியீடு ஆக ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு பிரசுரித்தார்கள். ‘புள்ளி’ என்பது அதன் பெயர். ஒரு ரூபாய் நோட்டை இரண்டாக மடித்த அளவில், 32 பக்கங்களும் கனத்த அட்டையும் கொண்ட அந்தத் தொகுப்பில், ‘கசடதபற’ இதழ்களில் வெளிவந்த கவிதைகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை, சில ஓவியங்களுடன் அச்சிட்டிருந்தார்கள். ஒரு பிரதியின் விலை 30 பைசா. நீலமணி, எஸ். வைதீஸ்வரன்,கலாப்ரியா, பதி. பாலகுமாரன், நா. விஸ்வநாதன், ஞானக்கூத்தன், ஐராவதம், ஆர்.வி. சுப்பிரமணியன், நகுலன், க.நா. சுப்ரமணியம், நா. ஜெயராமன், கல்யாண்ஜி, வே. மாலி, ஆத்மாநாம் ஆகியோரது கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த புதுமையான வெளியீடு தமிழகம் எங்குமுள்ள கவிதைக்காரர்களின் கருத்தைக் கவர்ந்தது. அதனால், 1973ல் ‘மினி கவிதைத் தொகுப்பு’ என்று பெயர் பெற்றுவிட்ட இத்தகைய முயற்சிகள் நாட்டின் பலபகுதிகளிலும் தலையெடுத்தன. புள்ளியை அடுத்து வெள்ளம் வருகிறது, என்ற அறிவிப்புடன் கலாப்ரியா தனது கவிதைகளைத் தொகுத்து திருநெல்வேலியிலிருந்து வெளியிட்டார். பல நல்ல கவிதைகள் உள்ளன. இதில் கலாப்பரியா தந்துள்ள கவிதைத் தலைப்புகள் அநேகம் அழகாக அமைந்திருக்கின்றன. ‘தலைப்புக்கள் ரசனை மிக்கவை. பக்குவமான தலைப்புகள் சில நேரங்களில் கவிதைகளைவிட அழகாக அமைந்து விடுகின்றன’ என்று இத்தொகுப்புக்குப் பாராட்டுரை வழங்கியுள்ள பா. செயப்பிரகாசமும் குறிப்பிட்டிருக்கிறார். மூன்றாவதாக விக்கிரமசிங்கபுரம் (பாபநாசம்) ‘பொதிகை அடி’யில் வசித்த கல்லூரி மாணவர்கள் நாலு பேர் (சுப்பு அரங்கநாதன், எஸ். வேலுசாமி, தா. மணி - MISS எம்.ஐ.எஸ். சுந்தரம்) பத்திரிக்கைகளில் வந்திராத தங்கள் கவிதைகளைத் தொகுத்து ‘உதயம்’ என்ற பெயரில் வெளியிட்டார்கள். ‘A Modern emotional lace’ என்று கூறிக்கொண்ட இவர்கள் தங்கள் கவிதைகளில் இனிய உணர்வுகளையும் சுகமான நினைப்புகளையும் கலந்திருக்கிறார்கள். இவர்களுடைய படைப்புகளில் பல பாராட்டத் தகுந்த விதத்தில் அமைந்துள்ளன. சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் (எஸ். எஸ். சுந்தர், ச. முருகன், மயிலவன், மலர் மன்னன்) ‘கதம்பம்’ என்ற தொகுப்பைப் பரிசுரித்தார்கள். இந்தக் கதம்பத்தில் மல்லிகையும் இருக்கும்; முல்லையும் இருக்கும், மருக்கொழுந்தும் இருக்கும்; அரளிப்பூவும் இருக்கலாம்!’ என்று அவர்கள் தங்கள் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர். பலரகமான பொருள்களையும் பற்றிய சுவையான எண்ணங்கள் இக்கதம்பத்தில் | | |
|
|